ஒருமுறை போப், நியூயார்க் நகரத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு அலுவல் சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு கிடைத்த ஓய்வு நேரத்தில், நியூயார்க் நகர வீதிகளில் கார் ஓட்ட ஆசைப்பட்டார் போப். உடனே, டிரைவரைப் பின் இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு, அவர் கார் ஓட்டத் தொடங்கினார். ரசித்து, லயித்து ஓட்டிக்கொண்டு இருந்தவரை ஒரு முனையில் மடக்கினார் டிராஃபிக் கான்ஸ்டபிள் ஒருவர். குனிந்து ஜன்னல் வழியாகப் பார்த்தால், டிரைவர் இருக்கையில் அமர்ந்தபடி போப் புன்னகை புரிந்துகொண்டு இருந்தார். அதைக் கண்டு ஆச்சர்ய அதிர்ச்சி அடைந்த கான்ஸ்டபிள், உடனே வாக்கி டாக்கியில் தனது மேலதிகாரியைத் தொடர்புகொண்டு, " சார், இங்கே ஒரு பிரச்னை" என்றார். " என்ன பிரச்னை?" என்று கேட்டார் மேலதிகாரி. " நான் மிக முக்கியமான ஒருவரின் காரை வழிமறித்துவிட்டேன்."
" யார் அந்த மிக முக்கியமானவர்?"
" அவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் போப்பையே டிரைவராக வேலைக்கு அமர்த்தியிருக்கிறார் !"
-- கி.கார்த்திகேயன்.
--ஆனந்த விகடன் . 9 - 5 - 2012.
" யார் அந்த மிக முக்கியமானவர்?"
" அவர் யார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் போப்பையே டிரைவராக வேலைக்கு அமர்த்தியிருக்கிறார் !"
-- கி.கார்த்திகேயன்.
--ஆனந்த விகடன் . 9 - 5 - 2012.
No comments:
Post a Comment