மனித உடலை மருத்துவ தேவைகளுக்காக ஸ்கேன் செய்வது தெரியும். இந்த 3டி ஸ்கேனர் என்பது நமது உடல் குறித்து 24 மில்லியன் புள்ளிவிவரங்களை 20 விநாடிகளில் எடுத்து கொடுத்து விடுகிறது.
தற்போது உடற்பயிற்சி தேவைகளுக்காக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விவரங்களை நமது மொபைல் மற்றும் லேப்டாப் மூலம் எடுத்துக் கொள்ளலாம். நமது உடல் அமைப்புக்கு என்ன வகையான உடற்பயிற்சி எடுப்பது, என்ன உணவை எடுத்துக் கொள்வது போன்றவை இந்த டேட்டாக்களில் கிடைத்துவிடும். சிறிய உடை மாற்றும் அறையைபோல உள்ள இந்த ஸ்கேனர் விரைவிலேயே சந்தைக்கு வரலாம்.
கை கொடுக்கும் கை
மாற்று உடலுறுப்புகளை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் பல முன்னேற்றங்களை கண்டுவருகின்றனர். இதற்கான சமீபத்திய சாட்சி 3டி படோமெட்ரிக் கை.
செயற்கை இதயம் பொருத்துவதுகூட சாத்தியமாகிவிட்டது. ஆனால் கையை இழந்தவர்களுக்கு அதன் இழப்பை ஈடுசெய்ய முடியாததாகவே இருந்தது. செயற்கை கரங்களை பொருத்தினாலும் அது சுயமாக வேலை செய்யாது. அந்த குறையை போக்கும் விதமாக இருக்கிறது இந்த 3டி பயோ மெட்ரிக் கை.
வழக்கமாக நாம் எந்த வேலை செய்தாலும் அதற்கு ஏற்ப கட்டளையிடுவது நமது மூளைதான். இந்த கட்டளைகளை உணரும் விதமாக இந்த பயோமெட்ரிக் உள்ளது. இதனால் வழக்கமான மனித கை செய்யக்கூடிய வேலைகளை போலவே இந்த செயற்கை கைகளால் செய்ய முடியும்.
இந்த கைகளை பொருத்திக் கோண்டு நாம் வழக்கமாக செய்யும் வேலைகளை செய்யமுடியும். ஒவ்வொரு விரல்களும் தனித்தனியாகவும் இயங்கும். இந்த முயற்சி வெற்றிபெற்றால் விஞ்ஞானத்தில் மைல்கல்லாகவே இருக்கும் என்கிறது மருத்துவ உலகமும்.
-- தொழில் நுட்பம். வணிக வீதி.
-- 'தி இந்து' நாளிதழ். இணைப்பு. திங்கள், டிசம்பர் 29, 2014.

No comments:
Post a Comment