வெள்ளை அடிக்க வண்ண வண்ண யோசனைகள்.
உங்கள் வீட்டுச் சுவரை வெள்ளை அடிப்பதற்கு ஏற்ற மாதிரி தயார்படுத்த வேண்ண்டும்.
சோப்பு கரைத்த தண்ணீரை கொண்டு சுவரில் படிந்திருக்கும் புகை, எண்ணெய்க் கறை, திட்டு திட்டாகப் படிந்திருக்கும் உணவுப் பண்டங்களின் கறை போன்றவற்றை முதலில் துடைத்தெடுக்க வேண்டும். உடைப்பு, துவாரங்கள், விரிசல் இருந்தால் மக்கு பூசுவது சிறந்தது. உடைப்பு பெரிதாக இருக்குமானால் சிமெண்ட் பூசி அப்பகுதியைச் சமன்படுத்தி 48 மணி நேரம்வரை உலரவிட வேண்டும்.
கலவை தயாரிப்பு :
1 கிலோ சுண்ணாம்புப் பொடியில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்க வேண்டும். பார்ப்பதற்கு நீர்த்துப்போனது போலத் தோன்றும். ஆகையால் 24 மணி நேரம் இந்தக் கலவையை அசைக்காமல் ஒரு இடத்தில் வைக்கவும்.
அடுத்த நாள் ஒரு சல்லாத் துணியில் சுண்ணாம்புக் கலவையை ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 20 கிராம் அளவில் ஃபெவிகாலை எடுத்துச் சுடு நீரில் கலந்து சுண்ணாம்புக் கலவையில் ஊற்றவும். மொத்தக் கலவையில் 3 கிராம் இண்டிகோ நிறத்தைக் கரைத்தால் சுவரில் பூச ஏதுவான சுண்ணாம்புக் கலவை தயார்.
-- ம.சுசித்ரா. ( சொந்த வீடு ).
-- 'தி இந்து' நாளிதழ். இணைப்பு. சனி, டிசம்பர் 20, 2014.

No comments:
Post a Comment