இந்தியா முழுவதும் ஸ்மார்ட் சிட்டி உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் 2007 ஆம் ஆண்டிலேயே இதற்கான திட்டத்தை குஜராத் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்கு GIFT ( Gujarat International Finance Tec -- City ) சிட்டி என்றும் பெயரிட்டிருந்தது. உலக தரத்திலான உள்கட்டமைப்புகள், தொழில்நுட்பம் கொண்ட இந்த நகரத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களும் தொழில் தொடங்க உள்ளன.
358 ஹெக்டேரில் அமைய உள்ள இந்த நகரத்தின் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தியாவின் முதல் ஸ்மார்ட் சிட்டியாக கிஃப்ட் சிட்டி வளர்ந்து வருகிறது.
விரிவுபடுத்தப்படும் பனாமா கால்வாய்
பனாமா கால்வாய் இந்த ஆண்டோடு நூற்றாண்டுகளை கொண்டாடி முடிக்கிறது. இந்த புகழ் வாய்ந்த பாதையை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
2016ல் புதிய பாதை பயன்பாட்டுக்கு வரும். 75 சதவீத வேலைகள் முடிந்து விட்டன. நூறு வருடங்களில் கப்பல் போக்குவரத்து பலமடங்கு முன்னேறிவிட்டதால், மிகப்பெரிய கப்பல்களும் சென்று வருவதற்கு ஏற்ப கால்வாய் விரிவுபடுத்தும் பணிகள் நடக்கின்றன. தற்போது இந்த கால்வாயை கடந்து செல்ல 10 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன. புதிய வழி நேரத்தை குறைக்கும், எரிபொருள் செலவு மிச்சமாகும்.
--வணிக வீதி.
-- 'தி இந்து' நாளிதழ். இணைப்பு. திங்கள், டிசம்பர் 29, 2014.

No comments:
Post a Comment