வீட்டுக் பணிகளில் முக்கியமானது கான்கிரீட் அமைக்கும் பணிதான். கான்கிரீட் பணி முடிந்த பிறகு அதை நீரால் ஆற்றுவது அவசியமானது. எந்த அளவுக்கு நீராற்றுகிறீர்களோ அந்த அளவுக்கு கான்கிரீட் பலமாக இருக்கும். அதாவது கான்கிரீட் மேற்பரப்பில் நீரைக் குறிப்பிட்ட காலத்திற்குத் தேங்கி இருக்குமாறு செய்ய வேண்டும்.
நீராற்றும் வேலையைச் செய்ய பல வழிகள் பின்பற்றப்படுகின்றன. கான்கிரீட் தளத்தின் மேல் நீரைத் தேக்கப் பல வழிகள் பின்பற்றப்படுகின்றன. நீர் வெளியேறிப் போகாமல் இருக்க பாத்தி கட்டுவது, ஈரக் கோணிகளைக் கொண்டு மூடி வைப்பது இப்படிப் பல வழிகள் பின்பற்றப்படுகின்றன. இதற்கு மாற்றாகப் பல வழிமுறைகளும் வந்திருக்கின்றன. உதாரணமாக, அக்ரிலிக் எமல்ஷன் வகையிலான பூச்சுகளை கான்கிரீட் பரப்பின் பூசியும் நீராற்றலாம். ஒரே ஒரு முறை செய்தால் போதும். பூசப்படும் பூச்சு கான்கிரீட் பரப்பின் மேல் சீரான படலமாகப் பரவும். இந்தப் படலம் கான்கிரீட் டிற்குள் இருக்கும் தண்ணீர் வீணாக ஆவியாகி வெளியேறிவிடாமல் தடுக்கும் வேலையைச் செய்யும். கான்கிரீட் வெகு விரைவில் உலர்ந்து போகாமல் காக்கும். இதனால் வெடிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும். எந்த முறையைப் பின்பற்றினாலும் சரி, கான்கிரீட்டுக்கு நீராற்றும் பணியைச் சரியாக செய்யாவிட்டால் கட்டிடத்தின் ஆயுள் குறைவுதான்.
-- சுந்தரி. ( சொந்த வீடு ).
-- 'தி இந்து' நாளிதழ். இணைப்பு. சனி, டிசம்பர் 13, 2014.

No comments:
Post a Comment