இந்தியாவில் மின்சார கார்கள் இன்று வரை அதிகம் பிரபலம் அடையமுடியாததற்கு காரணம் பேட்டரி சார்ஜ் என்னும் தடங்கள் தான். கார் பேட்டரியை மொபைல் மாதிரி நினைத்த இடத்தில் எல்லாம் சார்ஜ் போட முடியாது. அதற்கென்று ஸ்பெஷல் பிளக் பாயின்ட் வேண்டும். இல்லையென்றால் எலக்ட்ரிக் கார் வெறும் ஷோகேஸ் பொருள் தான். ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 முதல் 150 கி.மீ வரை தான் இந்தக் கார் செல்லும் என்பதால் அடிக்கொரு முறை சார்ஜ் செய்யவேண்டியிருக்கும். இந்த குறையை போக்கும் வகையில் SEEO என்னும் அமெரிக்க கம்பெனி ஔது வகை பேடரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேட்டரியை நீங்கள் ஒரு தடவை சார்ஜ் செய்தால் 350 முதல் 400 கிலோமீட்டர் வரை செல்லுமாம். சென்ற வாரம் இதை டெமோ காண்பித்து அசத்தி விட்டனர். இந்த பேட்டரியின் விலை சாதாரண கார் பேட்டரியை விட 50 சதவீதம் குறைவு என்பதால், ஒன்றுக்கு இரணடாக காரில் பொருத்தி 700 கிலோமீட்டர் லாங் டிரைவை சிங்கிள் சார்ஜில் மேற்கொள்ளலாம். பலருக்கும் பயனளிக்கும் கண்டுபிடிப்புதான் இது.
-- ரவி நாகராஜன். ( டெக் மார்க்கெட் ). சண்டே ஸ்பெஷல் .
-- தினமலர் திருச்சி 28-12-2014.
-- ரவி நாகராஜன். ( டெக் மார்க்கெட் ). சண்டே ஸ்பெஷல் .
-- தினமலர் திருச்சி 28-12-2014.
No comments:
Post a Comment