Monday, October 5, 2009

குடிக்காதீங்க...

தண்ணீர் குடிக்கலாம் . ஆனால் , பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தாதீர்கள் என்று அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக உடல்நல
ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளார்கள் . ஏனெனில் பாட்டிலில் உள்ள பைபீனால் ஏ என்ற வேதிப்பொருளானது , அதில் அடைக்கப்பட்ட தண்ணீரில் கலக்கிறதாம் . இதனால், மனிதர்களிடத்தில் மரபு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துகிறதாம் . இந்த அறிவிப்பை சில சோதனைகளுக்குப் பிற்கே ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட்டுத்தியுள்ளார்கள் .
ஸ்டெயின்லஸ் ஸ்டீலினால் ஆன பாட்டிலில் , குளிர்ந்த நீரையும் , சூடான நீரையும் வைத்திருந்து 77 பேரை பருகச் செய்து பரிசோதித்துப் பார்த்ததில் பைபீனால் ஏவின் அளவில் எந்த மாற்றமும் இல்லை . ஆனால் , இதேபோல் நீரை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து , அதே 77 பேரிடம் சோதித்தபோது , அவர்களின் ரத்தத்தில் ' பபீனால் ஏ 'வின் அளவு அதிகரிச்சிருக்காம் .
இந்த பபீனால் ஏ , மனிதர்களுக்கு இதய நோய் மற்றும் சர்க்கரை நோயை ஏற்படுத்துமாம் . நம்ம ஊர்ல தாய்மார்கள் எல்லாம் குழந்தைகளுக்கு பாலை கொஞ்சம் சூடாக பாட்டிலில் அடைத்து கொடுப்பது வழக்கம் . இப்படி சூடாக கொடுத்தால் , பபீனால் ஏவின் அளவு அபாயகரமான அளவிற்கு குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து விடுகிறதாம் . இப்படிப்பட்ட அபாயகரமான பாட்டில்களை கடந்த ஆண்டே கனடா தடைசெய்துவிட்டதாம் . தற்போது சிகாகோவும் தண்ணீர் பாட்டிலுக்கு தடை விதித்துள்ளது . நம்ம நாடு எப்போங்க ?
இலையில் மாசு !
லண்டனில் உள்ள லாங்கஸ்டர் பல்கலைக்கழகம் புதுசா ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடிச்சிருக்காங்க . அதாவது காற்றினால் ஏற்படும் சுகாதாரக்கேடு . அதோட , காற்றில் கலந்துள்ள மிக மிக நுண்ணிய வேதிப்பொருள்களையெல்லாம் மிகத் தெளிவாக கண்டுபிடிச்சுச் சொல்லுதாம் மர இலைகள் , கார் புகையில் ஹைட்ரோ
கார்பன் , விஷவாயுக்கள் எந்த அளவு கலந்திருக்கிறது என்று மர இலையை வைத்தே கண்டுபிடித்துவிடலாம் என்று அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பார்பரா மாஹர் கூறியுள்ளார் . இந்த மிதமிஞ்சிய தூசிக் காற்றினால் ஏற்படும் சுகாதாரக்கேடால் , மனிதர்களுக்கு மூளையிலிருந்து ஈரல் வரை அனைத்தும் கெட்டுப் போக வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள் . முதலில் சாலையோரத்தில் இருந்த 30 மரங்களில் உள்ள சில இலைகளை ஆய்வுசெய்தபோது , அந்த இலையில்படிந்திருந்த மாசுக்கள் அனைத்துமே மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் .
--- தினமலர் வாரமலர் . ஜூன் 7 . 2009 .

No comments: