Saturday, October 24, 2009

வித்தியாசம் !

மருத்துவர் ஒருவர் கடற்கரைக்குக் காற்று வாங்க வந்திருந்தார் . கடற்கரையில் அலைகள் அடித்து மீளும் இடத்தில் சில நட்சத்திர மீன்கள் கரை ஒதுங்கி உயிருக்குத் தத்தளித்துக்கொண்டு இருந்தன . அங்கே ஒரு சிறுவன் அலையோரத்தில் அப்படி ஒதுங்கிய மீன்களைப் பொறுக்கி , மீண்டும் தண்ணீரில் எறிந்துகொண்டு இருந்தான் .
" தம்பி , எதற்காக உன் நேரத்தை வீணடிக்கிறாய் ? நீ 10 மீன்களைத் தண்ணீரில் எடுத்து விடுவதற்குள் இன்னும் 100 மீன்கள் கரை ஒதுங்குகின்றன . உன் செயல் பெரிய வித்தியாசம் எதயும் செய்துவிட முடியாது என்று புரியவில்லையா ?" என்று டாக்டர் கேட்டார் .
" பெரிய வித்தியாசமா இல்லையா என்று தண்ணீருக்குத் திரும்பிய மீன்களிடம் கேட்டுப் பாருங்கள்.... புரியும் " என்றான் சிறுவன் .
டாக்டருக்குப் பொட்டென்று மண்டையில் அடித்தது போல் விளங்கியது .
-- சத்குரு ஜக்கி வாசுதேவ் , ஆனந்தவிகடன் , 01 - 07 - 2009 .

No comments: