Wednesday, October 14, 2009

பருவம் அடையும் முன் !

'பருவம் அடையும் முன் ஒரு பெண் கருத்தரிப்பாள் ' எப்படி ?.
பருவம் அடைந்த பின்னர்தான் பெண் கருதரிப்பாள் என்றுதான் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் . ஆனால் , உண்மை அதுவன்று ! பெண் பருவம் அடைவதற்கு முன்பே கருதரிக்க முடியும் ! வியப்பாக இருக்கிறதா ? என்றாலும் உண்மை அதுதான் .
பெண் பருவம் அடைகிறாள் என்றால் , அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவள் கருத்தரிக்க ( கருவுற ) தயாராகி விட்டாள் என்பதுதான் உண்மை . ஆம் . ஒரு பெண் பருவமடைந்ததாகச் சொல்கிறோமே அதற்குப் பதினைந்து நாள்களூக்கு முன் அப்பெண் ஆணோடு உடலுறவு கொண்டால் அவள் கருதரிப்பாள் .
கருவுறத் தயாராகி விட்ட பெண்ணுக்கு மாதம் ஒரு சினை அணு கருவாகி , கருவுறத் தயாராக இருக்கும் . அந்தச் சினை அணுவுடன் ஆணின் விந்தணு சேர்ந்தால் கரு உண்டாகும் . அவ்வாறு சேரவில்லையென்றால் , அந்தச் சினையணு சுமார் 15 நாள்கள் கழித்து சிதைந்து மாதவிலக்காக வெளிவரும் .
அப்படியென்றால் , ஒவ்வொரு மாதவிலக்கிற்கும் 15 நாள்களுக்கு முன் அவள் கருத்தரிக்கத் தயாராக இருக்கிறாள் என்று பொருள் .
அவ்வாறு நோக்கின் , ஒரு பெண் பருவமடைந்ததாக நாம் கூறும் முதல் மாத விலக்கிற்கு 15 நாள்களுக்கு முன்னமே அவள் கருத்தரிக்கத் தயாராய் உள்ளாள் என்பதே உண்மை .
மாதவிலக்கு என்பது , ஒரு பெண்ணின் சினையணுவுடன் சேர ஆண் விந்தணு கிடைக்காமையால் , அது 15 நாள் கழித்து சிதைந்து இரத்தப்பெருக்காக வெளிவருவதைக் குறிக்கும் . பருவமடைவது என்பது முதல் மாதவிலக்கு அவ்வளவே .
முதல் மாதவிலக்கு என்பது அவள் கருவுறவில்லை என்பதன் அடையாளமே தவிர , அதன்பின் தான் அவள் கருவுறுவாள் என்பதன் அடையாளம் அல்ல .
பருவமடைவதற்கு 15 நாள்களுக்கு முன்பே அவள் கருதரிக்க தாயார் . எனவே , ஒரு பெண் பருவம் அடையும் முன்பே கருதரிப்பாள் என்பதே உண்மை !
பருவமடைவதற்கு சரியாக 15 நாள்களுக்கு முன் ஒரு பெண் உடலுறவு கொண்டால் , அவள் கருதரிப்பாள் .
--- மஞ்சை வசந்தன் . பாக்யா , ஜூன் 12 - 18 ; 2009 .

1 comment:

நற்றமிழன்பன் said...

ஒரு பெண்ணுக்கு வரும் முதல் மாதவிலக்கு என்பது அவள் பருவம் அடைந்து விட்டாள் என்பதை நமக்கு அறிவுறுத்துகின்ற நிகழ்வு. ஆனால் முதல் மாதவிலக்கு அன்று தான் அவள் பருவம் அடைகின்றாள் என்று பொருள் அல்ல. முதல் மாதவிலக்கிற்கு 15 நாட்களுக்கு முன்னரே அவள் பருவம் அடைந்துவிட்டாள். ஆனால் அதை நாம் அறிந்து கொள்வதற்க்கு 15 நாட்கள் ஆகின்றன. ஆக ஒரு பெண் பருவம் அடைவதற்க்கு முன்னால் கருதறிக்க முடியாது. சரியா ????