Saturday, October 31, 2009

மம்மி !

பெண் பெயரில் ஆண் . ' மம்மி ' யிலும் குழப்பம் .
நியூயார்க் , ஜூன் 29 - 2009 .
புரூக்ளின் நகர அருங்காட்சியகத்தில் பெண் பெயரில் பராமரிக்கப்பட்ட மம்மியை ஸ்கேன் செய்த போது , அது ஆண் என்று தரியவந்தது .
அமெரிக்காவின் புரூக்ளின் நகர அருங்காட்சியகத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 4 எகிப்திய ' மம்மி ' க்கள் பராமரிக்கப்பட்டு வந்தது . இதில் ' லேடி ஓர் ' என்று பெயரிடப்பட்ட மம்மியின் மீது பெண் என்று எழுதப்பட்டு இருந்தது . கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக அந்த ' மம்மி ' பெண் என்று கருதப்பட்டு வந்தது ..
இந்நிலையில் , நியூயார்க் நகரின் புறநகர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் , அந்த மம்மிகளை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தினர் . அப்போது , ' லேடி ஓர் ' என்ற பெண் பெயரில் பராமரிக்கப்பட்டு வந்தது ஆண் மம்மி என்று தெரிய வந்தது .
எகிப்திய மன்னர்கள் இறந்த போது அவர்கள் உடலை பாடம் செய்து , ' மம்மி ' யாக்கிய முறை பற்றியும் , எகிப்தியர்கள் வாழ்க்கை முறை பற்றியும் ஆய்வு செய்வதற்காக ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது , பெண் பெயரில் இருந்தது ஆண் மம்மி என்று தெரிய வந்தது .
இது குறித்து அமெரிக்காவின் நார்த் ஷேர் பல்கலைக்கழக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் மிச்செல் பின்டோ கூறுகையில் , ' மம்மியின் எலும்புக்கூடு மற்றும் அவற்றைப் பற்றிய கூடுதல் விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட சோதனையில்தான் , பெண் பெயரில் இருந்தது ஆண் மம்மி என்று தெரியவந்தது ' என்றார் .
--- தினமலர் , 29 - 06 - 2009 .

No comments: