காசியில் விஸ்வநாதரும் , விசாலாட்சியும் பிரசித்தம் . அதுபோலவே அன்னபூரணி ஆலயமும் விசேஷமான ஒன்று . நடுவிலே பார்வதிதேவி அன்னபூரணியாக எழுந்தருளியிருக்கிறாள் . இரண்டு பக்கங்களில் ஒருபுறம் லட்சுமி , இன்னொரு புறம் பூதேவி இருக்கிறார்கள் . அன்னபூரணின் இடது கையில் அமுத கலசம் அலங்கரிக்கிறது வலது கையில் கரண்டி ஏந்தியிருக்கிறாள் .
அன்னபூரணி திருக்கோலத்தை முழுமையாக பார்த்துவிட முடியாது . உடம்பு முழுவதும் வெள்ளிக்கவசமிட்டு மறைத்திருப்பார்கள் . சந்நிதிக்கு எதிர்புறம் இரண்டு ஓட்டைகள் . ஒன்றுக்கு பிட்சத்துவாரம் என்று பெயர் . இன்னொன்று தர்மத்துவாரம் எனப்படும் . இந்த துவாரங்களின் வழியாகத்தான் அன்னபூரணியைத் தரிசிக்க முடியம் . தீபாவளியை ஒட்டி அன்னபூரணியை முழுமையாகத் தரிசிக்கலாம் . தங்கத்தாலான அன்னபூரணிக்கு நரகசதுர்த்தியின் முதல் நாள் அதாவது தனதிரயோதசி அன்று மாலை ரத்னக்கிரீடம் சூட்டி வகை வகையான அணிகலன்களால் அலங்காரம் செய்வார்கள் .
பொன்னும் , மணியும் ஜொலிக்கும் நிலையில் அம்பாள் அலங்கரிக்கப்படுவாள் . அன்று மாலை திரை திறந்து பூஜை செய்து திரும்பவும் திரை போட்டுவிடுவார்கள் . மறு நாள் சதுர்த்தசி . அமாவாசை, பாட்டிமை ஆகிய மூன்று நாட்களும் தங்க அன்னபூரணியை முழுமையாகத் தரிசிக்கலாம் .
தீபாவளி அன்று காசியில் சுவாமி புறப்பாடு உண்டு . தேரில் சுவாமி திருவீதிக்கு வருவார் . அன்று எல்லாருக்கும் லட்டு பிரசாதம் கொடுப்பார்கள் . சுவாமி கோயிலுக்குத் திரும்பும் போது தேரில் ஒரு லட்டும் இருக்காது . தெருவெல்லாம் இனிமை கமழும் நாள் அது .
--- தனமலர் . பக்திமலர் . 15 - 10 - 2009 .
No comments:
Post a Comment