Wednesday, October 7, 2009

ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் !

லண்டன் மாநகர காவல்துறையின் தலமையகம் தான் ஸ்காட்லாந்து யார்டு என்று அழைக்கப்படுகிறது . 20 மாடி கட்டடமான அதன் வாசலில் உள்ள பிரபலமான சுழல் பெயர்ப் பலகையை , அடிக்கடி திரைப்படங்களிலும் , செய்திகளிலும் நாம் பார்க்கலாம் .
1829 -ம் ஆண்டிலிருந்து ஸ்காட்லாந்து யார்டு செயல்பட்டு வருகிறது . அதனுடைய புகழ்பெற்ற டெலிபோன் எண்ணான 1212 இன்று வரை மக்களிடையே பிரபலம்
பல லண்டன் மாநகர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தலில் ஸ்காட்லாந்து யார்டு புகழ் வேகமாகப் பரவ ஆரம்பித்தது .
ஆயிரக்கணக்கான போலீஸ்காரர்கள் அங்கே பணி புரிகின்றனர் . துப்பறியும் கலையில் பல நவீன முறைகளை அறிமுகப்படுத்தி , தீர்க்க முடியாத பல கேஸ்களைத் தீர்த்து வைத்தது ஸ்காட்லாந்து யார்டு .
உலகெங்கிலும் , பல நாடுகளிலிருந்தும் புலனாய்வுக்காக வரும்படி ஸ்காட்லாந்து யார்டுக்கு ஏராளமான அழைப்புக்கள் வந்திருக்கின்றன . சமீபத்தில் கூட பெனசிர் புட்டோவின் கொலையில் இருந்த மர்மங்களை விடுவிப்பதற்காக யார்டை வரவழைத்தது பாகிஸ்தான் அரசு . இதெல்லாம் ஸ்காட்லாந்து யார்டின் முன்னாள் சிறப்பு அம்சங்கள் . இப்போது பழைய பெருங்காய டப்பாவாக ஆகிவிட்டது . அமெரிக்க போலீஸ் தான் இப்போது நம்பர் ஒன் .
--- தினமலர் , ஜூன் 12 . 2009 .

No comments: