கிளியோபாட்ராவின் காலக்கட்டம் கி.மு. 69 முதல் கி.மு. 30 வரை . தந்தை 12 -ம் தாலமியுடன் இணைந்து எகிப்தை ஆட்சி செய்தவர் . உடன் பிறந்த சகோதரர்களை மணந்துகொள்ளும் வழக்கம் அப்போது நடைமுறையில் இருந்தது . கிளியோபாட்ரா தன் சகோதரர்களான 13 -ம் தாலமி , 14 -ம் தாலமி இருவரையும் மணந்துகொண்டார் . தந்தைக்குப் பிறகு இவர்கள் இருவருடனும் கிளியோபாட்ரா அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டார் . நாளடைவில் , அதிகாரம் முழுமையாக கிளியோபாட்ராவிடம் சென்று குவிந்தது . எகிப்தின் தனி அரசியாக மாறினார் .
கிளியோபாட்ராவுக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் . ஒரு பிள்ளை ஜூலியஸ் சீஸருடையது . தாலமி சீஸர் என்பது இவன் பெயர் . மார்க் ஆன்டனி மூலம் கிளியோபாட்ராவுக்கு இரட்டையர்கள் பிறந்தனர் . இரண்டாம் கிளியோபாட்ரா செலீன் , அலெக்ஸாண்டர் ஹெலியோஸ் , பிறகு , மேலும் ஒரு மகன் . தாலமி பிலடெல்பஸ் . தன் சகோதரர்கள் மூலமாகக் கிளியோபாட் ராவுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை .
கூர்மையான அறிவும் , செயல் திறனும் , ராணுவ பலமும்கொண்டு இருந்தவர் என்று சரித்திரம் கிளியோபாட்ராவை நினைவுகூர்கிறது . கிளியோபாட்ரா உலக அழகியா ? அப்படி ஒன்றும் இல்லை என்கிறார் பண்டைய சரித்திர ஆசிரியரான ப்ளூடார்க் . கண்டெடுத்திருக்கும் நாண்யங்களைக்கொண்டும் இது நிரூபணமாகிறது .
கிளியோபாட்ரா குறித்த பல வதந்திகள் சீஸரின் மகன் அகஸ்டஸால் கிளப்பிவிடப்பட்டவை என்று ஐலர் கருதுகிறார்கள் .
நவீன முறையில் செய்யப்படும் டி.என். ஏ. பரிசோதனை கிளியோபாட்ராவை மீண்டும் உலகத்துக்கு அறிமுகம் செய்துவைக்கும் .
--- மருதன் , ஆனந்தவிகடன் .03 - 06 - 2009 .
No comments:
Post a Comment