Sunday, October 25, 2009

ஐ. ஏ. எஸ். தேர்வு .

2002 ஐ. ஏ. எஸ் . தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று . ' நீங்கள் கலெக்டர் ஆகிவிட்டீர்கள் . ஒரு படத்தைச் சுவரில் மாட்ட வேண்டும் . ஆனால் , சுவரில் பூசப்பட்டு இருக்கும் சிமென்டோ ஆணி அடிக்க முடியாதது . நீங்கள் என்ன செய்வீர்கள் ?'
கேள்விக்கான பதில் ....' ஸ்டிக்கர் மூலம் ஒட்டலாம் ; அந்த இடத்தில் மட்டும் சுவரைப் பெயர்த்து எடுத்து மரத்தால் ஆன சட்டத்தைப் பொருத்தலாம் ' என்றெல்லாம் பதிலுக்குச் சுவரில் முட்டிக்கொண்டீர்களா ? அப்படியெல்லாம் யோசித்தால் நீங்கள் எப்படி ஐ. ஏ. எஸ். ஆக முடியும் ? நீங்கள் கலெக்டர் . சுவரில் படம் மாட்டுவது உங்கள் வேலை இல்லை . அலுவலக உதவியாளரிடம் அந்த வேலையை ஒப்படைத்து விடுங்கள் . தனக்கான தகுதி என்னவென்று தெரியாமல் இருப்பதுதான் நம்முடைய பல தோல்விகளுக்குக் காரணம் .
---ரீ. சிவகுமார் , ( நேற்று...இன்று...நாளை ! ) ஆனந்தவிகடன் , 08 - 07 - 2009 .

2 comments:

வழிப்போக்கன் said...

இன்னொரு ஐ.ஏ.எஸ். கேள்வி:
பழைய பம்பாயில். நேர்முகத் தேர்வு.
அராபிக் கடலை ஒட்டியிருந்த மாபெரும் ஹோட்டலி. சுவரில் பெரிய இந்திய வரைபடம் மாட்டப்பட்டிருந்தது. கேள்வி: அராபிக் கடல் எங்கே இருக்கிறது?
பதில்: வரைபடத்தைக் காண்பித்து “இதோ இங்கே”.
கேள்வி: “வேறு எங்கேயும் இல்லையா?”?
பதில்: இல்லை.
தேர்வுக்குழுத்தலைவர்: “அதோ அங்கே பார். ஜன்னலுக்கு வெளியே!
அந்த நீலக்கடல்தான் அராபிக் கடல்.”

Unknown said...

Dear krishnamoorthi , அவர்களே , அரபிக்கடல் தொடர்பாக அருமையாகச் சொன்னீர்கள் .