Thursday, October 22, 2009

பார்வை வெளிச்சம் .

சென்ற ஆண்டு ஒரு நாளிதழில் நாகர்கோவிலைச் சேர்ந்த 14 வயதான மாஷா நஸிம் என்ற மாணவியின் கண்டுபிடிப்பு பற்றிய செய்தி வந்தது . உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டிய நல்ல திட்டம் என்று தோன்றியது . இன்று வரை அந்தத் திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை .
ரயிலில் உள்ள கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் மலக்கழிவுகள் தண்டவாளம் எங்கும் விழுவதால் நோய்க் கிருமிகள் அதிகம் பரவுகின்றன . இதை மாற்றுவதற்கான புதிய கழிப்பறை ஒன்றினை மாஷா வடிவமைத்திருக்கிறார் . இவரது அப்பா காஜா நஜ்முதீன் ஓர் அரசு ஊழியர் .
மாஷா உருவாக்கிய கழிப்பறை மிக எளிதானது . கழிப்பறையில் சேரும் கழிவுகள் ஒரு தொட்டியில் சேகரிக்கப்படும் . அவை ஒவ்வொரு ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றதும் ஒரு பொத்தானை அழுத்தினால் மொத்தமாக நடமாடும் கழிவு சேகரத் தொட்டி ஒன்றின் வழியே வெளியே எடுத்துச் செல்லப்பட்டு , சுத்தம் செய்யப்பட்டுவிடும் .
இந்தத் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வரவேறு , உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ரு பரிந்துரை செய்திருக்கிறார் . ரயில்வே உயர் அதிகாரிகள் பரிசீலனை செய்வதாகச் சொல்லி இருந்தார்கள் . ஆனால் , இன்று வரை அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவே இல்லை .
உலகெங்கும் சுகாதாரமான கழிப்ப்றைகள் உருவாக்குவதற்காக முழு நேரமாக இயங்கி வருகிறது . World Toilet Organization . இந்த நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக World Toilet College ஒன்றினை சிங்கப்பூரில் ஆரம்பித்து இருக்கிறது . இந்த நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் கருத்தரங்கில் மாஷாவின் கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டு விருது பெற்று இருக்கிறது . மாஷாவின் ஈடுபாடு மிகுந்த பாராட்டுக்கு உரியது .
--- எஸ் . ராமகிருஷ்ணன் ( சிறிது வெளிச்சம் ! ) , ஆனந்தவிகடன் , 08 - 07 - 2009 .

No comments: