" மராட்டியம் மராட்டியருக்கே... வேற்று மொழியினருக்கு இங்கே இடம் இல்லை " என்றார் ஒருசமயம். இன்னொருசமயம், " தமிழர்களை மிகவும் நேசிக்கிறேன். ஈழத் தமிழர்கள், இந்தியாவின் குழந்தைகள்..." என்றார். பாபர் மசூதி இடிப்பை முன்னின்று நடத்திய அரசியல் கட்சிகள் அடையாளம் மறைத்துப் பின்வாங்க, " ஒருவேளை சிவசேனா இடித்து இருந்தால், நான் பெருமை அடைகிறேன்..." என்றவர். " இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்துக்கள் தற்கொலைப் படையினராக மாறவேண்டும் " என்று கர்ஜித்தவர். தனது பேத்தி நெகா, ஒரு முஸ்லீமை மணந்தபோது முன்னின்று வாழ்த்தினார். "கடவுள் இல்லாமல் உலகம் இயங்காது " என்று சொன்ன தீவிர சைவ சித்தந்த ஆத்திகர். தனது மனைவி மீனா இறந்தபோது, மேஜை மீது இருந்த கடவுள் படங்களைச் சிதறடித்து, " கடவுளே இல்லை " என்று கோபம் காட்டியவர். இபபடித் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் முரண்கள், சர்ச்சைகள், அதிரடிகளால் நிரப்பிய பால் தாக்கரே, கடந்த 17-ம் தேதி தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டதை நம்ப முடியாமல் தவிக்கிறார்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்கள் !
போக்குவரத்து வசதிகள் நிரம்பியிராத அந்தக் காலகட்டத்தில் அண்ணாவின் மறைவுக்கு ஒன்றரைக் கோடி பேர் திரண்டது கின்னஸ் ரெக்கார்டு. ஆனால், எந்த ஆட்சிப் பொறுப்பிலும் நேரடியாக உட்காராத தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்த 20 லட்சம் பேர் கூடியதும் ஒரு ரெக்கார்டுதான்.
-- ஆனந்தவிகடன். 28 .11 . 2012.

No comments:
Post a Comment