அசோகச் சக்ரவர்த்திக்கு ஒருமுறை கடுமையான வயிற்று வலி வந்து, அரண்மனை வைத்தியர் மருந்து கொடுத்தும் குணமாகவில்லயாம். அவருடைய மனைவியர்களுள் அதிபுத்திசாலியான ஒருத்தி சக்ரவர்த்தியின் வயிற்றை அழுத்திப் பார்த்து, வயிற்றில் கட்டி இருப்பதால் வலி ஏற்படுகிறது. கட்டியைக் கரைத்தால் வலி நீங்கும் என்று சொன்னாள். அதற்கு காலை - மாலை வெங்காயச் சாற்றுடன் தேன் கலந்து பருகச் சொன்னாள். அதேமாதிரி வைத்தியர் செய்து தர, விரைவில் கட்டி கரைந்து, வலி நீங்கி, பூரண குணம் அடைந்ததாக அசோகரின் வாழ்க்கைக் குறிப்பு சான்று கூறுகின்றது.
-- மூலிகைமணி டாக்டர் கே.வெங்கடேசன்.
-- குமுதம்.
-- மூலிகைமணி டாக்டர் கே.வெங்கடேசன்.
-- குமுதம்.
No comments:
Post a Comment