பதினெண்சித்தர்களில் ஒருவரான அகத்தியர் காய்கறி, கீரை, கனிகள் ஆகியவற்றின் பண்பு, பயன்பாடுகளைப்பற்றி நிறைய அறிந்தவர். அவரிடம் ஒரு சீடர், " குருநாதரே! மானிடரின் இல்லற இன்பம் செழிப்பாக இருக்க எளிய கீரை ஏதும் சொல்லுங்களேன்?" என்று கேட்டார்.
குறுந்தாடியைத் தடவியவாறு அகத்தியர் ஓர் உவமை மூலம் ஐந்து விதமான கீரைகளைப்பற்றிக் கூறுகின்றார். இவைதான் அந்தக்கால ' வயாக்ரா'கீரைகள் !
" நறுந்தாளி நன் முருங்கைத்
தழை
தூதுவளை நற்பசலை
வாளில் அறுகீரை
நெய்வார்த்து உண்ணில்
யாளியென விஞ்சுவார்
போகத்தில்"
என்று சீடருக்குப் புன்னகைத்தவாறு பதில் கூறினாராம் அகத்தியர்.
யானையைவிடப் பெரிதான ' யாளி ' தற்போது இல்லை. கோயில் சிலைகளில் மட்டுமே ' யாளி ' எனும் மிருகத்தைக் காணலாம். காதல் களியாட்டத்தில் நாம் அந்த யாளீயையே மிஞ்ச முடியுமாம் ! எப்படி? நறுந்தாளி, நன்முருங்கை, தூதுவளை, நற்பசலை, அரைக்கீரை - இந்த ஐந்து கீரைகளையும் தினம் ஒன்றாக பருப்பு, மிளகு, சீரகம், பூண்டு, சிறுவெங்காயம் சேர்த்துப் பொரியல் செய்து பகல் உணவில் மட்டும் இரண்டு பிடி சாதத்தில் ஒரு கப் அளவு கீரையும் - ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்துச் சுவையுடன் சாப்பிட்டால் போதும் ! இதுதாங்க காதல் கெமிஸ்ட்டிக்கான பால பாடம்.
-- மூலிகைமணி டாக்டர் கே.வெங்கடேசன்.
-- குமுதம். 20 . 12. 2006

No comments:
Post a Comment