* பவன குமாரர், மாருதி, பஜ்ரங்க பலி, ஹனுமான், பாடலி புத்திரர், கேசரி நந்தன், சங்கட் மோசன், சுந்தரன், மகா ருத்திரன், கபீஷ்வரா,
குமார பிரம்மச்சாரி, மகா தேஜஸ்வி எனப் பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறார் மகா ராம பக்த சிரோமணியான ஆஞ்சனேயர்.
* ஆதிசங்கர மகான் ஏற்படுத்திய ஷண்மதங்களூள் முருகனுக்கானது, கௌமாரம்.
* இயற்கை எழில் சூழ்ந்த குமரி மாவட்டத்தில், எண்ணற்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். அந்த இடம்
மருந்துவாழ் மலை.
* ஸ்ரீராமரோட நண்பரான விபீஷணரோட சகோதரந்தான் குபேரன்.
* சனி கிரகத்தால் பாதிக்கப்படாதவர் ஆஞ்சநேயர்.
* ' உத்தர்முஹே ஆதிவராஹாய ' அப்படின்னு சொல்லுது ஒரு வடமொழி ஸ்லோகம். அதாவது, ஆஞ்சநேயருக்கு உரிய அஞ்சு முகங்கள்ல, வடக்கு
திசைக்கு உரியது வராக முகம். பொதுவா வராகரை வணங்கினா, எந்தவிதத் தடையும் விலகும். எதிரி பயம் போகும். பூமி தொடர்பான
பிரச்சனைகள் விலகும், கடன்கள் தீரும், நோய்கள் குணமாகும். இப்படி ஐதீகம் இருக்கு.
* இந்திய இல்லங்கள் பலவற்றில் வீட்டின் முன் முற்றத்திலோ, பின்புறத்திலோ, நடு முற்றத்திலோ ஒரு துளசி மாடம் -- துளசிச் செடி
வைக்கப்பட்டுள்ள ஒரு பீடம் உண்டு.
* சமஸ்கிருத மொழியில் " துலனா நாஸ்தி அதைவ துளசி " என்ற ஒரு கூற்று உள்ளது. துளசி ஒப்புயர்வற்ற குணங்கள் கொண்டது என்பது பொருள்.
இந்தியர்களுக்கு துளசி மிகப் புனிதமான செடிகளுள் ஒன்று. உண்மையில், துளசி ஒன்றுதான், ஒரு முறை பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட பிறகும்
நீரில் கழுவப்பட்டால் மீண்டும் பூஜைக்குப் பயன்படுத்தத் தக்கதாகக் கருதப்படுகிறது. துளசி தன்னைத்தானே தூய்மைப்படுத்திக் கொள்ளும் சக்தி
கொண்டதாக ஏற்கப்பட்டுள்ளது.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல் . டிசம்பர் 16 - 31 , 2912.

No comments:
Post a Comment