இஞ்சி என்பது நம் உடல் நலன்காக்கும் நல்ல உணவுப் பொருள் ( மருந்துப் பொருள் ). இஞ்சிச்சாறு காலையில் பருகினால் வயிற்றில் உள்ள தேவையில்லா சதையை ( தொப்பையை ) குறைத்து இடுப்பை வலிவாகவும், வனப்பாகவும் ஆக்கும்.
இஞ்சிச்சாறு வழக்கமாகப் பருகிகின்றவர்களுக்கு இடுப்பு அளவோடு, அழகாக இருக்கும். அதனாலே இஞ்சி இடுப்பழகு என்றனர்.
" காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலைக் கடுக்காய்
மண்டலம் தின்றால்
கோலை எறிந்து
குலாவி நடப்பர் "
-- என்பது சித்தர் பாடல்.
காலையில் இஞ்சிச்சாறும், பகலில் சுக்குச்சாறும், மாலையில் கடுக்காய் சாறும் பருகினால், உடல் வலுப்பெறும் என்பது மேற்கண்ட பாடலின் பொருள். அந்த அளவுக்கு இஞ்சி உடலுக்கு உகந்தது. இளமையும், இடுப்பழகும் தரக்கூடியது. ( இஞ்சி சாப்பிடும்போது அதன்மீதுள்ள தோலை நன்றாகச் சீவி அகற்றி விடவேண்டும். காரணம், இஞ்சித்தோல் நச்சுத் தன்மை உடையது. கேடு தரக்கூடியது ).
-- மஞ்சை வசந்தன், பாக்யா. அக்டோபர் 2 - 8; 2009.

No comments:
Post a Comment