பிரிட்டிஷ் ஆட்சியின்போது, விவசாயப் பொருட்களுக்கு தரநிர்ணயம் செய்வது தொடர்பாக 1937-ம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில், உணவுப்பொருட்களுக்கு இந்திய அரசு வழங்கிவரும் தரச்சான்றின் பெயர்தான் ' அக்மார்க் '. இது, ' அக்ரிகல்ச்சுரல் மார்க்கெட்டிங்' ( விவசாயப் பொருட்களின் விற்பனை ) என்பதன் சுருக்கம்.
தானியங்கள், பருப்புகள், சமையல் எண்ணெய்கள், மசாலா பொருட்கள், சமையல் பொடிகள், கூட்டுப் பெருங்காயம், நெய், தேன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட உணவுப்பொருட்களுக்கு அக்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது.
ஏதாவது பொருளைக் கலப்படம் செய்திருக்கிறார்களா, ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கிறதா, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதா என பல தீவிர ஆய்வுகளுக்குப் பிறகே அக்மார்க் முத்திரை வழங்கப்படும். எனவே, அக்மார்க் முத்திரை பெற்றுள்ள பொருட்களை நம்பி வாங்கி பயன்படுத்தலாம்.
-- -தினமலர் . சிறுவர்மலர் . 3.6.2011.

No comments:
Post a Comment