பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு, மடியில் நெருப்பை கட்டி கொண்டு காத்திருக்கும் பெற்றோர்களின் நெஞ்சில் பால்வார்க்கும் என எதிர்பார்க்கப்படும் 'பி சேப்' ஒரு ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் அப்ளிகேஷன். இதை இலவசமாக தரவிறக்கம் செய்து உங்கள் பிள்ளைகளின் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்துவிட்டால் கொஞ்சம் கவலை இல்லாமல் இருக்கலாம். இதன் மூலம் உங்கள் பிள்ளைகள் அல்லது நம் பாதுகாப்பில் உள்ளவர்களை உங்களால் துல்லியமாக கண்காணிக்க முடியும். அதாவது, அவர்கள் எங்கு இருக்கின்றனர், எங்கு செல்கின்றனர், ஏதாவது ஒரு இடத்தில் அதிக நேரம் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறார்களா என்று கணினி முன் அமர்ந்து கொண்டு அவர்கள் இருக்கும் ஊர், தெரு, விலாசம் முதற்கொண்டு பார்க்கமுடியும்.
மேலும், பிள்ளைகள் தங்களூக்கு ஏதாவது விபரீதம் ஏற்படுகிறது என உணர்ந்தால், இதில் உள்ள கார்டியன் அலர்ட் என்ற பொத்தானை அழுத்தினால் போதும். அவர்கள், ஆபத்தில் இருக்கிறார்கள் என்ற தகவல் உங்ககுக்கு இலவசமாக வந்து சேரும். இந்த அலர்ட் வசதி மூலம் பெற்றோர் மட்டுமல்லாமல் பல நண்பர்களுக்கு கூட ஒரே நேரத்தில் தகவல் தெரிவிக்க இயலும். போனசாக 'பேக் கால் ' என்ற வசதியும் இதில் உண்டு. அதாவது, நீங்கள் ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டீர்கள், அல்லது அங்கிருந்து யாரும் சந்தேகப்படாத வண்ணம் வெளியேற வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால், சும்மா மொபைலை நோண்டுவதைப்போல பேக் கால் பொத்தானை அழுத்தினால் உங்கள் போனுக்கு பொய்யாக ஒரு அழைப்பு வரும். அப்போது, உங்கள் போனில் சிக்னலே இல்லாவிட்டாலும் கூட , நீங்களும் எனக்கு கால் வந்திருக்கு எக்ஸ்கியூஸ் மீ ' என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிடலாம். செல்போன் வைத்திருக்காத வளர்ந்த பிள்ளைகளே இல்லை என்ற இன்றைய கால கட்டத்தில், இந்த வசதிகளின் மூலம் அவர்களை நீங்கள் கண்காணிக்க, தவறான வழியில் செல்லாமல் வழிநடத்த என்று ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க முடியும்.
-- ரவி நாகராஜன். டெக் மார்க்கெட் ( அறிவியல்... மருத்துவம்...தொழில் நுட்பம்... )
-- சண்டே ஸ்பெஷல். தினமலர். 18-5-2014.

No comments:
Post a Comment