உலகில் பாலைவனம் தவிர கொசுக்கள் இல்லாத இடங்களே இல்லை. 14 ஆயிரம் அடி உயரத்தில் மட்டுமல்ல ; ஆர்டிக் பிரதேசத்திலும்கூட கொசுக்களின் ரீங்காரம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
இந்தக் கொசுவின் வாய் குழல் வடிவில் நீண்டு தையல் ஊசிபோல் அமைந்திருக்கும். முனியில் ஒரு சிறிய ரம்பமும் இருக்கிறது.
பெண் கொசுக்கள் நமது உடலில் மென்மையாய் அமர்ந்து, ரம்பத்தால் ஒரு நுண்ணிய துளையை போடுகிறது. அதன்பின் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்ற ஊசியை உள்ளே நுழைக்கிறது. ஒரு குழல் வழியே எச்சிலை உள்ளே செலுத்தி, மறுகுழல் வழியே ரத்தத்தை உறிஞ்சுகிறது. இந்த எச்சில் நம் ரத்தத்தை உரிஞ்சும்போது உறைந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது.
இப்படி தடையில்லாமல் ரத்தத்தைக் கொசு உறிஞ்சிக் கொண்டேயிருக்கும். வயிறு நிரம்பிய பிறகு உபரி ரத்தம் குதம் வழியே வீணாக வழிந்துகொண்டிருக்கும்.
இதில் ஆச்சரியம் என்னவெனில், பெண் கொசுக்கள்தான் இப்படி ரத்தத்தை உறிஞ்சும் வேட்டைகளில் ஈடுபடுகின்றன. ஆனால் ஆண் கொசுக்களுக்கு இத்தகைய போர்க்குனம் கிடையாது. சுத்த சைவம். பூ, பழம் மற்றும் மொக்குகளில் கிடைக்கும் திரவம்தான் தினசரி உணவு. ஆண் கொசுக்களுக்கு ரத்த வாடை என்றால் அலர்ஜி!
-- டாக்டர் ஆர்.கோவிந்தராஜ். ஆச்சரியங்கள் 1000.
-- தினமலர். சிறுவர்மலர். ஜூலை 25, 2014.

No comments:
Post a Comment