வட நாட்டுக் கோயில்களும், தென்னாட்டுக் கோயிகளும் அமைப்பில் முற்றிலும் மாறுபட்டு இருப்பது ஏன்?
பாரதத்தின் உட்பரப்பை நாகரம், வேஸரம், திராவிடம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறது சிற்ப சாத்திரம். வட நாட்டுக் கோயில் அமைப்புகளுக்கு நாகரம் என்று பெயர். இதில் சிறந்த சுதை வேலைகள் இருக்காது. மகாராஸ்டிரம், மத்திய பிரதேசம் போன்ற பாரதத்தின் நடுப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு வேஸரம் என்று பெயர். இதன் அமைப்பு சற்று நாகர விமானங்கள் போன்று இருந்தாலும், சிற்ப சுதை வேலைகளில் தென்னாட்டுக் கோயில்களை ஒத்து இருக்கும். தென்னிந்தியத் திருகோயில்களுக்கு திராவிடம் என்று பெயர். கலை சிற்ப சுதை வேலைப்பாட்டுடன் கண்ணைப் பறிக்கும் விமானங்களும் கோபுரங்களும் இதில் அடங்கும். அந்தந்த பகுதியைச் சார்ந்த சிற்ப சாத்திர வல்லுனர்களால் அமைக்கப்பட்ட மற்றும் எழுதப்பட்ட நூலகளின் அடிப்படை வேறுபாடுகள்தான் இவை.
-- மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார். ( அறிவோம் ! தெளிவோம் ! )
-- தினமலர். பக்திமலர். ஜூலை 10, 2014.

No comments:
Post a Comment