Saturday, August 13, 2016

உயரமான ரயில் பாலம்


உலகிலேயே மிக உயரமான ரயில் பாலம்
     இமயமலையில் உள்ள செனாப் நதியின் மேலே இமயமலையின் நீண்ட மலைத்தொடரையும் காஷ்மீர் மாநிலத்தையும் இணைக்கும் இந்த இரும்பு பாலம் ஆர்ச் வடிவில் உருவாகி வருகிறது.  ஆயிரத்து 177 அடி உயரன் கொண்ட இந்த பாலம் 2016ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.  அதிநவீன தொழில் நுட்பத்தில் உருவாகி வரும் இந்த பாலம் வேகமான சூறைக்காற்றையும், இயற்கை பேரிடர்களையும் தாங்கக்கூடியது.  ஜம்முவில் இருந்து பாரமுல்லாவுக்கு இப்போது இருக்கும் சாலையில் பயணித்தால் 6 மணி நேரம் ஆகும்.  இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் அரை மணி நேரத்தில் சென்று சேர முடியும்.  இந்த பாலத்தைக் கட்ட இந்திய ரயில்வேயின் கொங்கன் ரயில்வே 550 கோடி ரூபாயை செலவழித்துள்ளது.  பாலத்தின் முக்கிய பகுதியான மெயின் ஆர்ச் இரண்டு கேபிள் கிரேன்களால் இணைக்கப்பட்டு வருகிறது.  1315 மீட்டர்கள் நீளமுள்ள இந்த பாலத்தின் பாதையை அமைக்க 25 ஆயிரம் டன்கள் இரும்பு தேவைப்படுகிறது.  கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத இடங்களில் ஹெலிகாப்டர் மூலமாக எடுத்துச் செல்கின்றனர்.
-- மாநிலங்கள்.
-- தினமலர். 13-7-2014.  

No comments: