மூன்று தோஷங்கள்
விச்ரவஸ் என்ற பிராமண மகரிஷியின் பிள்ளையான ராவணனை சம்ஹாரம் செய்ததால், ராமருக்கு 'பிரம்மஹத்தி தோஷம்' ஏற்பட்டது. இந்த தோஷத்தை அவர் போக்கிக்கொண்ட இடம்தான் ராமேஸ்வரம்.
ராவணன் மாவீரனும்கூட ! கார்த்த வீர்யார்ஜுனனையும், வாலியையும் தவிர, தான் சண்டை போட்ட அனைவரையும் ஜெயித்தவன். இப்படிப்பட்டவனைக் கொன்றதால், ராமருக்கு 'வீரஹத்தி தோஷம்' உண்டாயிற்று. இந்த தோஷத்திற்குப் பிராயச்சித்தமாகத்தான் வேதாரண்யத்திலே ராமலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் ராமர். ராவணன் சிவபக்தன். வீணை வாசிப்பதில் நிபுணன். சாம கானம் பாடுவதில் வல்லவன். இந்த மாதிரியான நல்ல அம்சங்களை 'சாயை' என்பார்கள். 'சாயை' என்றால் ஒளி, நிழல் என்ற இரண்டு அர்த்தங்களும் உண்டு. ஒளி என்ற பெருமை வாய்ந்த குணங்களை எல்லாம் குறிப்பிடும் 'சாயை' உடைய ராவணனை வதம் செய்ததால், ராமருக்கு 'சாயா ஹத்தி' தோஷம் உண்டாயிற்று. இது தீர்வதற்காக பட்டீஸ்வரத்தில் ராமலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் ராமர்.
-- சிவ.அ.விஜய் பெரியசுவாமி. ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், ஜூலை 24, 2014.

No comments:
Post a Comment