Friday, August 19, 2016

டிப்ஸ்...டிப்ஸ்...

*   பெயின்ட் அடிக்கும்போது கைகளில் பட்டு விட்டால், சிறிது சமையல் எண்ணெயை கைகளில் நன்றாகத் தேய்த்துக்
    கொள்ளுங்கள்.  பிறகு, சோப்பு போட்டுக் கழுவினால் பெயின்ட் கறை நீங்கி கைகள் சுத்தமாகி விடும்.
*   கெட்டியாக இருக்கும் வெல்லத்தை எளிதாக பொடிக்க வேண்டுமா?  கேரட் துருவியுல் பெரிய துளைகள் உள்ள பக்கம்
     வெல்லக் கட்டியை துருவினால் பூப்பூவாக உதிர்ந்து விடும்.  ( வெல்லத்தை அளந்து எடுக்க வேண்டிய சமயங்களில் இப்படி
     துருவிக் கொள்ளலாம் ).
*   கடலை மாவில் பஜ்ஜி செய்வதைவிட கடலைப்பருப்பை கால் மணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து கெட்டியாக அரைத்து பஜ்ஜி
     செய்தால் அருமையாக இருக்கும்.  பருப்புடன் நான்கு மிளகாய் வற்றலையையும் சேர்த்து ஊறவைத்து அரைத்துக் கொண்டால்
    மிளகாய் பொடி சேர்த்து செய்வதை விட சுவையாக இருக்கும்.
*  பிரெட்டில் தடவ வெண்ணையோ, ஜாமோ இல்லையா?  கவலை வேண்டாம்.  ஒரு பிரெட் துண்டின் ஒரு பக்கம் நெய்யையும்
    மற்றொரு துண்டின் மேல் பக்கம் தேனையும் தடவி, இரண்டையும் ஒட்டி ஃபிரிட்ஜில் சில நிமிடங்கள் வைத்து எடுத்து
    சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.  
*   காய்கறிகளை ஃபிரிட்ஜில் வைக்கும்போது பீட்ரூட் , கேரட் , கத்தரிக்காய் போன்ற காய்களை துளைகளுடன் இருக்கும்
    பைகளில் வைத்தால் இரண்டு நாட்களில் வாடிவிடும்.  இதைத் தவிர்க்க காய்களை வாங்கி வந்ததும் கழுவி, அந்த
    ஈரத்துடனேயே இந்தப் பைகளில் போட்டு வைத்தால் மேலும் சில நாட்களுக்கு ஃபிரெஷ்ஷாக இருக்கும்.  பூசணிக்காயைக்    
    கூட இப்படி கழுவி, தோல் சீவி, துண்டுகளாக்கி இந்த பைகளில் போட்டு வைத்தால் அழுகாமல் இருக்கும்.
-- அவள் விகடன். ஜனவரி 4, 2008. 

No comments: