வியாழன் நிலவில் நீரூற்று !
வியாழனின் துணைக்கோளான யூரோப்பாவில் நீர்நிலைகள் இருப்பதும், உறைந்து கிடக்கும் பனிப்பாறைகளில் இருந்து நீராவியானது நீரூற்றைப் போல் பீறிட்டு பாய்வதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வியாழனின் நிலவான யூரோப்பாவில் உயிரினங்கள் வாழும் சாதியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகிறது.
சூரிய குடும்பத்திலுள்ள வியாழன் கிரகத்தைப் பற்றி ஆராய அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து கடந்த 1990ம் ஆண்டு ஹப்பின் விண்வெளி தொலைநோக்கி செலுத்தப்பட்டது.
வியாழனின் 67 துணைக்கிரகங்களில் ஒன்றான யூரோப்பாவில் இரண்டு பெரிய நீர்நிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
பனிக்கட்டிகளால் மூடப்பட்ட யூரோப்பாவில், நீர்நிலைகள் இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், யூரோப்பாவின் தென் துருவத்தில் இரண்டு நீர்நிலைகளிலிருந்து 200 கி.மீ. தூரத்திற்கு நீராவி பீரிடுவது படமாக்கப்பட்டுள்ளது.
இப்போது பெறப்பட்டுள்ள புகைப்படங்களின் மூலம் யூரோப்பாவின் தென் துருவதிலிருந்து மங்கலான புறஊதா ஒளி வெளியேறி, வியாழனின் காந்த சக்தியால் ஈர்க்கப்படுவது உறுதியாகியுள்ளது. அதிவேகமாக பாயும் கீற்றால் நீரின் மூலக்கூறுகள் பிளவடைந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் அயனிகள் நீராவிகளாக மாறி 200 கி.மீ.உயரத்திற்கு பீரிடுவது தெரிய வந்துள்ளது.
--தினமலர். 15-12-2013.

No comments:
Post a Comment