குளிரூட்டி வசதி கொண்ட புதிய ஹெல்மெட். அமெரிக்காவில் கண்டுபிடிப்பு.
போர்க் களத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து வீரர்களைக் காக்க இந்த கண்டுபிடிப்பு உதவும். மிகக் குறைந்த எடையுள்ள இந்த கருவி, ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருக்கும். இது காற்றின் தட்பவெப்பத்தை சீரான நிலையில் வைத்திருக்க உதவும். வீரர்கள் சுவாசிப்பதற்கான தூய்மையான காற்றை வடிகட்டி அனுப்பும் செயலையும் இந்த கருவி மேற்கொள்ளும். இதற்கு மின்சாரத்தை வழங்கும் பேட்டரியை இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும்.
இப்போது வடிவமைக்கப்பட்டுள்ள ஹெல்மெட்டில் சுவாசத்திற்கான முகமூடி பொருத்தப்பட்டுள்ளது. இதில் காற்றை குளிரூட்டும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மிகக் குறைந்த எடையுடன் இருக்கும் இக்கருவி, குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும். அதை அணிந்திருப்பவருக்கு எந்தவிதமான அசவுகரியங்களும் ஏற்படாது.
தகவல் தொடர்புக் கருவிகளை அந்த ஹெல்மெட்டிலேயே பொருத்துவதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். ரசாயனம், கதிர்வீச்சு, அணுக்கதிர் தாக்குதலில் இருந்து வீரர்களை இது காக்கும்.
-- சர்வதேசம்
-- 'தி இந்து' நாளிதழ். வியாழன், மே, 22 , 2014.

No comments:
Post a Comment