ஸ்மார்ட் போனில் பேட்டரி டக் டக்கென்று தீர்ந்து விடுவது இப்போது எல்லாருக்குமான பொதுப் பிரச்சனையாகவே ஆகிவிட்டது. முக்கியமான நேரங்களில் கரெக்டாக பேட்டரி டெட் ஆகி சொதப்பி பலரையும் சிரமத்திற்குள்ளாக்கும். இதற்கு தீர்வாக யோட்டா என்னும் ரஷிய நிறுவனம் ஒரு புது வகை டெக்னாலஜியை கண்டுபிடித்திருக்கிறது. இது என்ன? பொதுவாக மொபைல் ஃபோனின் பெரும்பாலான பேட்டரி பவர் அதன் டிஸ்பிளே, வைஃபை, மற்றும் பிரவுசிங்கில் தான் அதிகம் செலவாகிறது. இதனால், 'இன்க் கேஸ் பிளஸ் என்னும் ஒரு கறுப்பு வெள்ளை டிஸ்ப்ளே கொண்ட ஒரு கேஸை மொபைலின் பின்னே பொருத்திவிட்டால் போதும் - பேட்டரி 20 சதவீதத்துக்கும் கீழே குறையும் போது போனில் மெயின் கலர் டிஸ்பிளேவை ஆப் செய்து பின்னால் உள்ள கறுப்பு வெள்ளை டிஸ்ப்பிளேயை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபலை கூடுதலாக 6 - 8 மணி நேரத்திற்கு உபயோகிக்க முடியும். ஆப்பிள் / சாம்சங் மொபைலுக்கு இன்க் பிளஸ் கேஸ் ஏற்கனவே ரெடி. அனேக மொபைல் மாடல்களுக்கு இந்த கேஸை தயாரிக்க ஆரம்பித்து விட்டதாம் இந்த கம்பெனி.
-- ரவி நாகராஜன். டெக் மார்கெட் ( அறிவியல்...மருத்துவம்... தொழிநுட்பம் )
-- சண்டே ஸ்பெஷல். தினமலர். 20-7-2014.
-- ரவி நாகராஜன். டெக் மார்கெட் ( அறிவியல்...மருத்துவம்... தொழிநுட்பம் )
-- சண்டே ஸ்பெஷல். தினமலர். 20-7-2014.
No comments:
Post a Comment