பார்வையற்றோர் படிக்க உதவும் மோதிரம்
பத்திரிகை, புத்தகம் ஆகியவற்றைப் பார்வையற்றோர்களும் படிக்கும் விதமாக மோதிர வடிவிலான புதிய கருவியை அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதில், 3டி பிரிண்டர், சிறிய கேமரா, சிந்தடிக் வாய்ஸ் ரீடர் ஆகியவை உள்ளன. சற்றே பெரிய சைஸ் மோதிரம் போன்று தோற்றமளிக்கும் இந்தக் கருவியைப் பார்வையற்றவர் விரலில் மாட்டிக் கொண்டால் போதும்.
புத்தகம், செய்தித்தாள், ஓட்டல் மெனு கார்டு என எதுவாக இருந்தாலும் அதன் மீது விரலை வைத்து வரிசையாகத் தடவிச் செல்ல வேண்டும். அப்போது விரல் அசைவு மூலமாக அந்த எழுத்துகள் ஸ்கேன் செய்யப்படும். பின்னர், அந்த எழுத்துகள் ஒலி வடிவமாக்கப்பட்டு வைப்ரேட் இயந்திரங்கள் மூலமாக வாய்ஸ் சிஸ்டத்துக்கு அனுப்பப்படும். அங்கிருந்து அந்த வார்த்தைகள் அனைத்தும் ஒலி வடிவமாக வெளியேறுகின்றன. அதைப் பார்வையற்றவர் கேட்டு எழுதியிருப்பதை அறிந்துகோள்ள முடியும் என இதை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் ராய் சில்கார்ட் செயல்முறை விளக்கம் அளிக்கிறார்.
இந்த மோதிரக் கருவியின் விலையை இன்னும் நிர்ணயிக்கவில்லை. விற்பனைக்கு அனுப்பும்போது அது குறித்து முடிவு செய்யப்படும் என்கிறார். அதே நேரத்தில் அமெரிக்காவில் இந்தக் கருவிக்குக் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும் என நம்புகின்றனர். ஏனெனில் அமெரிக்க மக்கள் தொகையில் 1 கோடி 12 லட்சம் பேர் பார்வையற்றவர்கள்
-- வை.ரவீந்திரன். வெற்றிக்கொடி. இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ். திங்கள், ஜூலை 14, 2014.

No comments:
Post a Comment