புளியமரப் பொந்தில் நம்மாழ்வார் வசித்தது ஏன்?
மகாவிஷ்ணு ராமராக அவதாரம் எடுத்தார். அந்த அவதாரத்தின் இறுதிக் கட்டம். ராமபிரான் இந்த பூவுலகத்தை விட்டுச் செல்ல இன்னும் 3 நாட்கள்தான் இருக்கிறது.. அப்போது ராமர் தன் தம்பியான லட்சுமணனை அழைத்து தான் தனிமையில் இருக்க விரும்புவதாகவும் தன்னை யாரையும் சந்திக்க அனுப்பதே என்றும் கூறினார். ஆனால், ராமபிரானை கடைசியாக பார்க்க வேண்டும் என்ற ஆசையில் துர்வாச முனிவர் அங்கு வந்தார். அவரை உள்ளே விடாவிட்டால் எங்கே அவரது சாபத்திற்கு ஆளாகி விடுவோமோ என்று லட்சுமணன் பயந்தார். எனவே ராமரை பார்க்க அனுமதித்து விட்டார்.
ராமரை பார்த்து விட்டு துர்வாசர் சென்றபின், லட்சுமணனை ராமர் அழைத்தார். தான் சொன்ன சொல்லை மீறியதால் மரமாகப் போவாய் என்றார். இதனால் அதிர்சி அடைந்த லட்சுமணன் அண்ணா தங்களை பிரிந்து என்னால் எப்படி இருக்க முடியும் என்றார்.
அதற்கு ராமபிரான் கவலைப்படாதே அங்கும் நான் உன்னோடு இணைந்திருப்பேன். நான் இந்த அவதாரத்தில் சீதையை காட்டிற்கு அழைத்துச் சென்ற பாவத்திற்கு 18 ஆண்டுகள் தியான சிந்தனையில் ஒரே இடத்தில் இருக்க வேண்டியுள்ளது. அப்போது மரமாக வலரும் உனது பொந்தில் நான் வாழ்வேன் என்றார்.
ராமாவதாரத்திற்கு முன்பு கிருஷ்ணாவதாரத்தில் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாக கிருஷ்ணர் பிறந்தார். அப்போது வசுதேவரும் தேவகியும் தங்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வேண்டினர். அதற்கு கிருஷ்ணர் கலியுகத்தில் மோட்சம் கிடைக்கும் என்றார்.
இந்த விவரங்களை ராமபிரான் லட்சுமணனிடம் கூறினார். கலியுகத்தில் நான் அவர்களுக்கு மகனாகப் பிறந்து அவர்களுக்கு மோட்சம் கொடுத்து உன்னிடம் வந்து 16 ஆண்டுகள் இருப்பேன் என்றார். மேலும் ஒரு மோதிரத்தை எடுத்து அதை உருட்டி விட்டார். அது எங்கு போய் நிற்கிறதோ அங்கு மரமாக பிறப்பாய் என்றும் கூறினார். அது ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி நதியின் தென்புறம் நின்றது. அங்கே லட்சுமணன் புளியமரமாக தோன்றினார். வசுதேவர் தேவகி தம்பதியர் ஆழ்வார் திருநகரியில் காரி - உடைய நங்கை என்ற தம்பதியாக பிறந்தனர். காரி குறுநில மன்னராக இருந்தார்.
( வசுதேவர் ராமாயண காலத்தில் காசிப முனிவராக பிறந்தார். அவர்தான் அடுத்த பிறவியில் காரியாக பிறந்தார் ). அவருக்கு மகனாக ராமபிரான் நம்மாழ்வாராகப் பிறந்தார். குழந்தை பருவத்தில் நம்மாழ்வார் தவழ்ந்து சென்று புளியமரத்தில் போய் அமர்ந்து கொண்டார். அங்கிருந்துதான் பல்வேறு திவ்யதேசத்தை பற்றி பாசுரங்கள் எழுதினார்.
-- பொன்மதி.
-- உங்கள் வாழ்க்கை வழிகாட்டி. ஆன்மிக மாத இதழ். ஜூன் - 2014.
-- இதழ் உதவி : கனக.கண்ணன், செல்லூர். .

No comments:
Post a Comment