சிசேரியன் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு.
சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. எலிக்குஞ்சுகளை வைத்து சோதனை செய்ததில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அறுவை சிகிச்சை மூலம் பிறந்த எலிகுஞ்சுகளில் குறைந்த எண்ணிக்கையில் நோய் எதிர்ப்பு செல்கள் காணப்பட்டன. அதே சுக்கபிரசவமாக, இயற்கையாக பிறந்த எலிக்குஞ்சுகளிடம் இந்த செல்கள் அதிக எண்ணிக்கையில் கானப்பட்டன.
அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குட்டிகளைவிட இயற்கையான பிரசவத்தில் பிறந்த குட்டிகளுக்குத் தாயிடமிருந்து அதிக பாக்டீரியாக்கள் கிடைத்தன. தங்களிடமே உள்ள ஆபத்தில்லாத மூலக்கூறுகளையும் மற்ற இடங்களில் இருந்து வந்த ஆபத்துள்ள மூலக்கூறுகளையும் உணரும் ஆற்றல் குட்டிகளுக்கு உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு 'டைப் -1' ரக நீரிழிவு நோயும், அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையும் அதிகம் காணப்படுவதை மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இம்யுனாலஜி ( நோய் எதிர்ப்பியல் ) என்ற மருத்துவப் பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசவ வலி என்பது கர்ப்பிணிக்குத் துயரத்தைத் தந்தாலும் அவருடைய குழந்தை நோயைத் தாங்கும் வலிமையைப் பெற இது அவசியம் என்று பாரம்பரிய வைத்தியர்கள் கூறுவார்கள். அதை இந்த ஆய்வும் வழிமொழிகிறது.
--சி.ஹரி. சேதி புதிது. நலம்வாழ இணைப்பு.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், ஜூலை 15, 2014.

No comments:
Post a Comment