Wednesday, March 4, 2009

கண்ணதாசன் !

கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை எழுதுவதை கேள்விப்பட்ட ஒருவர் , நேராக அவரிடம் சென்றார் .' காந்தி , நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் நாடு சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்டவர்கள் . அவர்கள் சுயசரிதை எழுதியது சரி. நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள் ' என்று கேட்டார் . நம்மிடம் இப்படி ஒருவர் வந்து கேட்டால் அடுத்த நிமிடமே அவரது கன்னம் பழுத்துப் போயிருக்கும் . ஆனால் , கண்ணதாசனோ மிக அமைதியாக , ' காந்தி , நேரு போன்றவர்கள் ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதற்காக எழுதினார்கள் . ஒருவர் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் எழுதுகிறேன் ' என்றார் . இதுதான் டைமிங் சென்ஸ் என்பது .
--- குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் . தஞ்சையில் அண்ணாதுரை நூற்றாண்டு விழா கருத்தரங்கில் தலைமை வகித்து பேசும்போது கூறியது .
எம். ஏ,. பட்டதாரி !
ஒருவர் செக்கு ஆட்டிக் கொண்டிருந்தார் . அப்போது மாட்டை விட்டு விட்டு ரொம்ப நேரமாக செக்கில் குனிந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்தார் . அப்போது அந்த வழியே சென்ற எம் . ஏ ,. படித்த பட்டதாரி இளைஞர் இதைப்பார்த்ததும் நேராக செக்குக்காரரிடம் சென்ரார் .' ரொம்ப நேரமா செக்கில் எதையோ தேடிக்கொண்டு இருக்கிறீர்களே .... மாடு சுற்றாமல் நின்றால் உங்களுக்கு எப்படி தெரியும் ' என்றார் . அதற்கு அந்த செக்காட்டி , ' மாடு கழுத்தில் மணி கட்டியுள்ளேன் . அந்த ஒலி நின்றால் மாடு சுற்றவில்லை என்பது , தெரிந்து விடும் ' என்றார் .
உடனே அந்த பட்டதாரி இளைஞர் , ' மாடு ஒரே இடத்தில் நின்று கொண்டு தலையை மட்டும் ஆட்டினால் என்ன செய்வீர்கள் ? ' என்று மறுபடியும் மடக்கினார் . செக்காட்டியோ சிறிதும் யோசிக்காமல் , ' மாடு எம். ஏ,. படிக்கவில்லையே ! ' என்றார் .
--- குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் . தஞ்சையில் அண்ணாதுரை நூற்றாண்டு விழா கருத்தரங்கில் தலைமை வகித்து பேசும்போது கூறியது

No comments: