Sunday, March 29, 2009

மூன்று

!வைத்த கண் வாங்காமல் பார்க்கச் செய்யும் கவர்ச்சியும் அச்சமும்கொண்ட அழகு மூன்றெனச் சொல்வர் முன்னோர். ஓய்வின்றி அலையடிக்கும் சமுத்திரம் ; காதடித்து நின்று அசைந்தாடும் யானை ; படமெடுத்துப் பரக்கப் பார்க்கும் நாகப்பாம்பு !
ஒரு மழைத் துளி மணிக்கு ஏழு மைல் வேகத்தில் தரையில் விழுகிறது !
இரண்டாம் உலகப் போரில் 57 நாடுகள் பங்கு பெற்றன !
தனது காதுகளைச் சுத்தம் செய்யுமளவுக்கு ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு நீளம் !
ஜூலியஸ் சீசர் தன் வழுக்கைத் தலையை மறைக்க , இலைகளால் ஆன கிரீடத்தைப் பயன்படுத்தினார் !
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதன்முதலில் தனது இடது காலைத்தான் பதித்தார் !
யானைக்கு 'அடி' சறுக்குமோ இல்லையோ , உலகத்திலேயே 'ஜம்ப்' பண்ண முடியாத ஒரே விலங்கினம் யானைதான் !
--ஆனந்தவிகடன் .{ 23-07-2008 .}
விசுவாசம் !
அயர்லாந்துக்கு ஒருவன் சுற்றுலா சென்றிருந்தான் . மிகவும் தாகமெடுத்தது ஒரு வீட்டில் அருந்துவதற்குத் தண்ணீர் கேட்டான் .
அந்த வீட்டுப் பெண்மணி அவன் நிலை பார்த்து , ஒரு கோப்பையில் சூடான சூப் கொடுத்தாள் .
வீட்டு நாய்க்குட்டி விருந்தாளியிடம் ஓடி வருவதும் அவன் கால்களுக்கு இடையில் புகுந்து செல்வதும் , செல்லமாகக் குரைத்து அவன் கவனத்தைக் கவர்வதுமாக இருந்தது .
"நாயைக்கூட மிக நட்புடன் இருக்கப் பழக்கியிருக்கிறீர்கள் " என்றான் , வந்தவன் பாராட்டும்விதமாக .
"அப்படியில்லை, நீங்கள் பயன்படுத்திக்கொண்டு இருப்பது அதனுடைய உணவுக் கோப்பை . அதனால் உங்களைவிட்டு நகர மாட்டேன் எங்கறது " என்றாள் . அந்தப் பெண்மணி .
-- சத்குரு ஜக்கி வசுதேவ் . ஆனந்தவிகடன். ( 22-10-2008 ) .

No comments: