சர் ஐசக் நியூட்டன் !
மனித வரலாற்றில் மிகப் பெரிய விஞ்ஞான மேதையாகக் கருதப்படும் ஐசக் நியூட்டன் பிறந்த மூன்றாவது மாதம் அவருடைய தந்தை காலமானார் . மூன்று வயது வரை ரொம்பவும் அம்மா செல்லம் . நியூட்டனுக்கு தாயே தெய்வம் என்றிருந்தபோது , திடீரென்று அந்தத் தாய் ஸ்மித் என்கிறவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு வேறு ஊருக்குச் சென்றுவிட , நியூட்டன் என்கிற மூன்று வயதுச் சிறுவனுக்கு இது பேரிடையாக அமைந்தது . 10 வயது வரை பாட்டியிடம் ஒருவித தனிமையான , ஏக்கமான வாழ்வு அவரை மிகவும் பாதித்தது . இதனால் பிற்பாடு அவருக்கு ஏற்பட்டது ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் அல்லது பெண்கள் மீது வெறுப்பு .
மார்ச் 1727 -ல் , 85 வயதில் இறந்த நியூட்டன் தன் வாழ்நாள் முழுவதும் எந்தப் பெண்ணோடும் உடலுறவு கொண்டது இல்லை என்பதே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை !
தபால்தலை !
உலகில் பிரிட்டிஷ் தபால்தலைகளில் மட்டுமே நாட்டின் பெயர் அச்சிடப்படுவதில்லை . ஆனால் , பிரிட்டிஷ் மகாராணியின் படம் உள்ள ஸ்டாம்புகளில் மட்டும்தான் அப்படி . ஒரு காலத்தில் பிரிட்டன் உலக மகா வல்லரசாக இருந்தபோது ' உலகமே என்னுடையது , தபால்தலையில் பிரிட்டன் என்று அறிமுகம் செய்துகொள்ளத் தேவை இல்லை ' என்கிற மனப்பான்மை அதற்கு இருந்தது . தவிர , நவீன ( ஒட்டுகிற ) தபால்தலையைக் கண்டுபிடித்ததும் பிரிட்டன் தான் . ஆகவே , இப்படி ஒரு ஸ்பெஷல் சலுகை !
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் . 07 - 01 - 2009 .
No comments:
Post a Comment