தியான லிங்கம்...
"தியான லிங்கம் " 1999 , ஜூன் 24-ம் தேதி பூரணமான நிலையில் ( கோவையை அடுத்த வெள்லியங்கிரி மலையடிவாரத்தில் ) இந்த உலகுக்கு அர்பணிக்கப்பட்டது . வேறு எங்கும் தியான லிங்கம் இல்லை . ஆசையின் அடிப்படையிலும் அச்சத்தின் அடிப்படையிலும் எழுப்பப்பட்ட கோயில்கள் வேறு . தன் அகங்காரத்துக்குத் தீனி போடும்விதமாக , அடுத்த நாட்டு அரசன் கட்டிய கோயிலைவிடப் பெரிதாக எழுப்பவேண்டும் என்ற எண்ணத்தில் கோயில்கள்தான் இங்கு அதிகம் . ஆனால் அன்பை மட்டுமே அடிப்படையாக வைத்து , தன்னார்வத் தொண்டர்களால் உருவாக்கப்பட்டது இந்த தியான லிங்கம் .ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய விதையை நமக்குள் தூவுவதற்காக மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது இந்த அற்புதம் . நாம் இதுவரை அனுபவத்தில் உணர்ந்துள்ள வாழ்க்கை , இரு வேறு நிலைகளுக்கிடையில் ஊசலாடுவது . இருள் - வெளிச்சம் , ஓசை - நிசப்தம் , விருப்பு - வெறுப்பு , இன்பம் - துன்பம் , ஆண் - பெண் என எல்லாவற்றுக்கும் இரண்டு பரிமாணங்கள் உண்டு .இரண்டு நிலைகள் இருந்தால்தான் படைப்பு என்ற ஒன்று நிகழவே முடியும் . இந்த இருமை நிலையைத்தான் நம் பாரம்ப்ரியத்தில் சிவன் - சக்தி என்று உருவகப்படுத்தினார்கள் . மனித உடலில் இடகலை , பிங்கலை என இரண்டு நாடிகள் வழியாக வாழ்க்கை நடந்துகொண்டு இருக்கிறது . இது ஒரு புறம் . மனித வாழ்வில் , ஏழு முக்கிய வளர்ச்சி நிலைகள் உள்ளன . இவை மனித உடலில் ஏழு தளங்களில் ஏழு சக்கரங்களாக சூட்சுமமாக அமைக்கப்பட்டுள்ளன . இந்த சக்கரங்கள் பற்றியும் , இவற்றில் ஒரு தூங்கும் பாம்பாக அபார சக்தி உறங்கிக்கொண்டு இருப்பது பற்றியும் அனுபவபூர்வமாக உணராதவரை , அடுத்தவர் வார்த்தைகளில் அது வேடிக்கைப் பேச்சாகிவிடும் தியான லிங்கத்தில் ,இந்த ஏழு சக்கரங்களும் உச்ச நிலையில் தூண்டப்பட்டு இருக்கின்றன என்பதே அதன் தனித்தன்மை . தியான லிங்கத்தின் எல்லைக்குள் வருபவர் எவராயினும் , சூட்சுமமாக அவருள் ஒரு விதை விதைக்கப்படுகிறது . அது அவரை மேல் நிலை நோக்கி உயர்த்திச் செல்வதற்குப் பேருதவி புரியும் .
ஏன் லிங்க வடிவம் ?.
வடிவற்ற நிலையிலிருந்து சக்தி ஒரு வடிவெடுக்கும்போது , அது முதலில் பெறுவது லிங்க வடிவம்தான் . அதீத சக்தியைப் பூட்டிவைக்க மிக உன்னதமான வடிவம் தியான லிங்கம் !
தியான லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது எப்படி ?
ஒரு வடிவத்தைப் பிரதிஷ்டை செய்யும்போது அதற்கு மந்திரப் பிரதிஷ்டை; பிராணப் பிரதிஷ்டை என இரு வழிகள் உள்ளன . ஒவ்வொரு சக்தி நிலைக்கென்று உள்ள மந்திரங்களை உச்சாடனம் செய்து , பிரதிஷ்டை செய்வது மந்திரப் பிரதிஷ்டை . உயிர் சக்தி கொண்டு நேரிடையாகச் சக்தி நிலையில் பிரதிஷ்டை செய்வது பிராணப் பிரதிஷ்டை . தியான லிங்கம் அதீத சக்தி கொண்டு பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது . அதற்குக் கிட்டத்தட்ட மூன்றாண்டு கால தீவிர சாதனை தேவைப்பட்டது . நாம் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்...தியான லிங்கம் யோகக் கலையின் அதி தூய்மையானதொரு வெளிப்பாடு .
தியான லிங்கம்.... சில சிறப்புத் தகவல்கள் !
தியான லிங்கம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை விளக்குவதற்காக , நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தம்பத்தில் இந்து , இஸ்லாம் , கிறிஸ்துவம் , ஜைனம் , புத்தம் , தாயிஸம் போன்ற உலகின் முக்கியமான எல்லா மதங்களின் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன .
மூன்று உயரமான படிகளில் ஏறியதும் , ' பரிக்கிரமா ' என்னும் திறந்தவெளிப் பாதை . இருபுறமும் நீள் மண்டபங்கள் .உடனடியாக கவனத்தைக் கவர்வது , யோகக் கலையின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் பதஞ்சலியின் அற்புத வடிவம் . அவருக்கு நேரெதிரில் வனஸ்ரீ என்னும் பெண் தெய்வத்தின் வடிவம் . ஒரு பொன் இலை வடிவத்தில் , வனஸ்ரீ அன்பையும் , செல்வத்தையும் குறிக்கிறாள் . தவிர கண்ணப்பர் , மெய்ப்பொருள் நாயனார் , ஷிவயோகி , சதாசிவ பிரம்மானந்தா , அக்கா மகாதேவி , பூசலார் போன்ற தெய்வப் பிறவிகளின் சிற்ப வடிவங்கள் . எங்கும் சக்தி நிலையை விளக்கும் சர்ப்ப வடிவங்கள் .
இவற்றைக் கடந்ததும் , பிரமிக்க வைக்கும் வட்ட வடிவக் கருவறை . மையத்தில் கம்பீர அழகுடன் பரவசப்படுத்தும் தியான லிங்கம் . 33 அடி உயர வட்ட வடிவமான அபாரமான கருவறையில் கான்க்ரீட் , இரும்பு போன்ற பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன . செங்கல்லும் , மண்ணும் , பாறையும் ,இயற்கையான பிணைப்புப் பொருட்களும் ம்ட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன .
இந்தக் கருவறைக் கூடத்தின் சுற்று வெளியில் , லிங்கத்தை நோக்கியபடி 28 தியானப் பிறைகள் அமைக்கப்பட்டுள்ளன .
தியான லிங்கம் அடர்த்தியான கருங்கல் கொண்டு அமைக்கப் பெற்றது . தியான லிங்கத்தின் உயரம் 13 அடி , 9 அங்குலம் .
ஆவுடையார் என்று சொல்லப்படும் அதன் பீடம் , சுருண்டு படுத்திருக்கும் ஒரு சர்ப்பத்தின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது . லிங்கத்தைவிட 30 சதவீதம் அடர்த்தி குறைவான வெண்பாறையில் உருவாக்கப்பட்டுள்ளது அது .
ஆவுடையார் சர்ப்பத்தின் ஒவ்வொரு பகுதியும் , 3 அடி 3 அங்குலம் . மொத்த நீளம் 13 அடி , 9 அங்குலம் .
தியான லிங்கத்தில் ஏழு சக்கரங்களின் சக்தி நிலைகளில் ஏழு பித்தளை வ்ளையங்கள் . ஆவுடையார் சர்ப்பத்துக்கு ஏழு சுருள்கள் . தியான லிங்கத்தைச் சுற்றிலும் ஜல சீமை .
வட்டக் கருவறையில் மைய உச்சியில் , லிங்க வடிவில் தொங்கவிடப்பட்டு இருக்கும் பித்தளை அமைப்பு நேரடியாகச் சூரியக் கதிர்கள் நுழைவதைத் தடுத்து , கருவறைக்கூடத்தை எப்போதும் குளுமையாக வைத்திருக்க உதவுகிறது .
லிங்கத்தின் உச்சியில் துளித் துளியாக நீர் சொட்டிக்கொண்டு இருக்கும் . ஒலி , வெளிச்சம் , விளையாடும் எண்ணெய் விளக்குகள் , உள் வரை ஊடுருவும் அமைதி எல்லாமாகச் சேர்ந்து தியான லிங்கத்தின் அண்மையில் இருக்கையில் , விவரிக்க முடியாததொரு தெய்வீக உணர்வை உள் செலித்துகின்றன
--சத்குரு ஜக்கி வாசுதேவ். ஆனந்தவிகடன். ( 18-04-2007 ) .

No comments:
Post a Comment