Thursday, March 19, 2009

சனிசிங்கனாபூர் .

ஷீரடியிலிருந்து சுமார் 50 கி. மீ . தொலைவில் மெயின் ரோட்டில் உள்ளது சனிசிங்கனாபூர் எனும் ஸ்தலம் . இது சனிபகவான் ஸ்தலமாகும் . இங்கு சனிபகவானுக்கு விக்ரகம் கிடையாது . அதற்குபதில் ஒரு சிலா ( நிற்கும் நிலையில் உள்ள ஒரு கல் ) உள்ளது . அதற்குதான் அபிஷேகம் நடைபெறுகிறது . அபிஷேகம் செய்பவர்கள் எந்த நேரத்தில் செய்தாலும் ( இரவு முழுவதும் உண்டு ) அங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி விட்டு , ஈர ஆடையுடன் பக்தர்கள் சுவயமாக அபிஷேகம் செய்கின்றனர் . அதுதான் அங்கு மரபு . மேலும் , கருப்பு ஆடை மட்டும் அல்லாது சிவந்த ஆடைகளும் அணிந்து பக்தர்கள் அபிஷேகம் செய்யலாம் . விசேஷமாக அந்த ஊரில் வீடு , கடை , கோயில் , பாத்ரூம் உட்பட எதற்கும் வாசல் கதவு என்பதே கிடையாது என்பது ஓர் வியப்பூட்டும் விஷயம் ஆகும் . இறைவன் காக்கின்றார் என்ற நம்பிக்கை மேலோங்கி உள்ளது .
தமிழ் நாட்டில் கும்பக்கரை நீர்வீழ்ச்சிக்கு பக்கத்தில் குச்சனூர் என்ற இடத்திலும் சனிபகவானுக்கு கோயில் உள்ளது . ஆனால் , திருநள்ளாறில் உள்ள சனிபகவான் மட்டிலுமே அனுக்கிரக மூர்த்தியாக உள்ளார் . எனவேதான் இந்த ஸ்தலம் விசேஷமானது .
நான் மற்றும் என் வீட்டினர் 5 பேர்களும் ஷீரடி , சனிசிங்கனாபூர் சென்று வந்துள்ளோம் .
--- R . தேவதாஸ் . என் நண்பர் மற்றும் TOUR ORGANISER . கூறக் கேட்டது .

2 comments:

குப்பன்.யாஹூ said...

பயனுள்ள பதிவு.
மேலும் காசி, ரிஷிகேஷ், கயா பற்றி எல்லாம் எழுதுங்கள். நன் உங்கள் பதிவுகள் அனைத்தும் படிக்க வில்லை இன்னும், ஒருவேளை ஏற்கனவே எழுதி உள்ளிஇர்களா என்று தெரியவில்லை.
.

க. சந்தானம் said...

குப்பன் யாஹூ அவர்களுக்கு , ஜூன் 15 , 2008 முதல் 'என்றும் ஒரு தகவல் ' என்ற தலைப்பில் எழுதி வருகிறேன் . அதை OLDER , & OLDEST ல் தொடர்ந்து படித்து வாருங்கள் . மேலும் எழுதுவேன் .