சீனப் பெருஞ்சுவர் !
சீனப் பெருஞ்சுவரைப்பற்றி பெருமைப்படக் கூடியது சந்திரனிலிருந்து மனிதனால் பார்க்கக்கூடிய ஒரே கட்டிட அமைப்பு என்பதே . 1938 ரிச்சர்ட் ஹலிபர்ட்டன் எழுதிய , ' அதிசயங்களின் இரண்டாவது புத்தகம் ' என்ற
நூலில் இடம் பெற்ற இக்குறிப்பைக் கொண்டே பாட நூல்களில் கூட இச் செய்தி இடம் பெற்றது . ஆனால் , தற்பொழுது இச்செய்தி தவறு என்று கண்டறியப்பட்டு சீனப் பாடநூல்களிலிருந்துகூட நீக்கப்பட்டுள்ளது .
என்பது சிலர் மட்டுமே அறிந்த உண்மை . அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கலமான ஸ்கைலாப்பிலிருந்து வில்லியம் போக் என்ற விஞ்ஞானி சீனப் பெருஞ்சுவரை வெறும் கண்களால் பார்த்ததாக அறிவித்தது கூட , பீகிங்கிங்குக்கு அருகிலுள்ள பெரிய கால்வாய் என்று பின்பு கண்டறியப்பட்டது . சீன விண்வெளி விமானி யாங்லிவெங் விண்வெளியிலிருந்து வெறும் கண்களால் சீனப்பெருஞ்சுவரைப் பார்க்க
முடியவில்லை என்று கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது . --- கு . கோவிந்தராஜன் .
---அன்புள்ள ஆசிரியருக்கு . ஆசிரியர் நாள் சிறப்பு மலர் . செப்டம்பர் , 2008 . ( காரைக்கால் -- புதுவை யூனியன் பிரதேச ஆசிரியர் சங்க அலுவல்முறைத் திங்களிதழ் . )
No comments:
Post a Comment