அகில், சந்தனம், சாம்பிராணி முதலிய மணப்பொருள்கள் மரங்களில் கிடைப்பன. கஸ்தூரி, கோரோசனம், புனுகு முதலான மணப்பொருள்கள் விலங்குகளிடம் கிட்டுவன.
கஸ்தூரி இமயமலைப்பகுதிகளில் உள்ள ஒருவகை மான் வயிற்றில் பெறப்படுவது. கோரோசனம் பசுவின் வயிற்றில் கிடைப்பது. புனுகு ஒருவகைப்பூனையிடம் சுரப்பது. புனுகு மிகவும் விசேஷமான மணப்பொருளாகும்.
புனுகு என்ற பிராணி பூனையைப் போல இருக்கும். வாசனைப் பொருளை உருவாக்குவது. இதன் பிறப்புறுப்பு அருகில் வாலின் கீழ்ப்பக்கம் ஒரு தைலப்பை இருக்கும். இந்தப் பையில் தைலம் சுரக்கும். அத் தைலத்தை மரத்தில் பீய்ச்சித் தேய்த்துவிடும். காட்டுவாசிகள் இதனைச் சேகரிப்பர்.
நகரில் இதனை வளர்ப்பவர்கள் நடுவில் சுழலும் மூங்கில் அமைந்த கூண்டில் அடைத்து வைப்பர். தைலம் மிகுந்த நிலையில் தைலத்தை மூங்கிலில் பீய்ச்சித் தேய்க்கும். அதனை வழித்துப் பத்திரப்படுத்தி உபயோகிப்பர். இதுவே புனுகு. புழுகில் இருந்து இப்படி எடுக்கப்படுவது புனுகு.
-- மானஸதேவதா. தினமலர். பக்திமலர். ஜூன் 27,2013.

No comments:
Post a Comment