தனது மகன் திருமணத்துக்கு ஒவ்வொரு கல்யாணப் பத்திரிக்கையையும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அக்சடித்து ஆச்சர்யபடவைத்திருக்கிறார் கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் சூரிய நாராயண ரெட்டி. இவரது மகன் சரத்துக்கும், சென்னையைச் சேர்ந்த ஆத்மிகாவுக்கும் வரும் 29.5.2013 அன்று சென்னையில் திருமணம். அதற்கென அச்சடிக்கப்பட்ட வி.ஐ.பி - க்களுக்கான ஒவ்வொரு அழைப்பிதழும் தங்க இழைகளால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறதாம். அழைப்பிதழுடன் துபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலந்த பழ வகைகளும் வழங்கப்படுமாம். அந்த அழைப்பிதழ் தவிர 7,500 ரூபாய் மற்றும் 450 ரூபாய் செலவில் மேலும் இரண்டுவிதமான அழைப்பிதழ்களும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்பு ஷில்பா ரெட்டி திருமணத்திற்குத்தான் அதிகபட்சமாக 12 ஆயிரம் ரூபாய் செலவில் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டது. அந்தச் சாதனையை அரசியல்வாதியும் பெல்லாரி சுரங்க அதிபருமான சூரியநாராயண ரெட்டி முறியடித்துள்ளார். - கூடுவாஞ்சேரி கோயிந்தசாமி மொய் 100 ரூபாய்!
-- இன்பாக்ஸ் . ஆனந்த விகடன் . 29. 5.2013.
-- இன்பாக்ஸ் . ஆனந்த விகடன் . 29. 5.2013.
No comments:
Post a Comment