சமய உலகில் சில எண்களுக்கு முக்கியத்துவம் உண்டு. 5, 8, 16, 32, 64 போன்றவை அவை. சிவபெருமானின் முகங்கள் ஐந்து. மந்திர எழுத்துக்கள் ஐந்து, பூதங்கள் ஐந்து என ஐந்தின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
மரங்களிலும் பஞ்ச தருக்கள் என ஐவகை மரங்களுக்குரிய பெருமைகள் புராணங்களில் பேசப்பட்டுள்ளன. சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து தோன்றிய மரங்கள் பஞ்ச வில்வங்கள் . அவை கூவிளம், நொச்சி, மாவிலங்கை விளா, வள்ளி முதலியன.
ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பவர் சிவன். சிவபெருமான் ஐந்து ஆலமரங்களுக்கிடையில் வீற்றிருக்கும் இடம் பஞ்சவடி.. கோதாவரி தீரத்தில் இருந்த பஞ்சவடியில் ராமர் வனவாச காலத்தில் வசித்தார் என்பது இதிகாச தகவல்.
பல்லவம் என்றால் தளிர் என்று பொருள். அத்தி, அரளி, மா, வெண்ணாவல் இலைகளைப் பஞ்ச பல்லவம் என்பர் வைதிகர். பஸ்மாசுரனுக்கு அஞ்சி நடித்த சிவபெருமான் ஒளிந்த காடு அஒவேலங்காடு எனப் புராணத்தகவல் உண்டு. நாகலிங்கப்பூவில் ஒரு லிங்கத்தின் தோற்றம் இருக்கும். ஐவேலங்காட்டில் ஐந்து லிங்கங்கள் காட்சி தரும் ஒருவகைக்கொடி உண்டு. அபூர்வமாகக் காணப்படும் இக்கொடி, உப்பு வேலூரில் உள்ளது.
-- புலவர் வே. மகாதேவன்.
-- தினமலர் பக்தி மலர். ஏப்ரல் 4, 2013.

No comments:
Post a Comment