கம்ப்யூட்டர் மவுஸ் உருவாக்கிய எங்கல்பார்ட் மரணம்.
முதல் வீடியோ கான்பரன்ஸ் நடத்தியவர். இன்டர்நெட் தொகுப்புக்கு யோசனை தெரிவித்தவர், ஆராய்ச்சியாளர் டக்ளஸ் எங்கல்பார்ட். 2. 7 .2013 செவ்வாய்க்கிழமை இரவு மரணமடைந்தார்.
அவருக்கு வயது 88. அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் ரேடியோ ரிப்பேர் செய்பவரின் மகனாக 1925 ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி பிறந்தவர்.
மவுஸ் தயாரிப்பு.
1961 ம் ஆண்டு கம்ப்யூட்டர் தொடர்பான ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு திரும்பிவந்ததும், கம்ப்யூட்டர் துறைக்கு உதவியாக சில சாதனங்களை உருவாக்கும் முயற்சியில் எங்கல்பார்ட் ஈடுபட்டார்.
அப்போது ' கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் எக்ஸ் - ஒய் பொசிஷன் இண்டிகேட்டர் ' கருவியை அவர் டிஸைன் செய்தார். அதை தயாரிக்கும் பணியை பில் இங்கிலிஸ் என்ற சக இஞ்சினியரிடம் அவர் ஒப்படைத்தார். கம்ப்யூட்டர் வைக்கும் மேஜைக்கு அடியில் பொருத்தி, முழங்கால் கொண்டு இயக்கும் கருவியாக அது முதலில் தயாரிக்கப்பட்டது. ஆனால், கடைசியில் டேபிள்டாப் மவுஸ் ஆக அது உருமாறியது.
1968ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ நகரில், இன் ஜினியர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாநாட்டில், மவுஸ் கருவியை எங்கல்பார்ட் அறிமுகப்படுத்தி, ஒரு மணி நேரம் செயல்படுத்திக்காட்டினார். அப்போது, 30 மைல் தூரத்தில் இருந்த சக ஆராய்ச்சியாளரின் உருவம் மற்றும் குரலை மாநாட்டு திரையில் காட்டி எங்கல்பார்ட் உரையாடினார். இதுவே முதல் வீடியோ கான்பரன்ஸ் ஆகும்.
-- தினமலர் , 5.7.2013.

No comments:
Post a Comment