கேள்வி: " எல்லா சிவாலயங்களிலும் இரவு அர்த்தஜாமத்தில் மற்ற நிறப் புடவையிருந்தும், ஏன் வெள்ளை நிறப் புடவையைச் சாத்துகின்றார்கள்?"
பதில்: " கருமை நிறம் -- தாமச குணத்தைக் காட்டுவது. செம்மை நிறம் -- இராஜச குணத்தைக் காட்டுவது. வெண்மை நிறம் -- சத்துவ குணத்தைக் காட்டுவது. இரவிலே எல்லா உயிகளும் சாந்தமாக இருக்க வேண்டும். அதனால்தான் அர்த்த ஜாமத்தில் அம்பிகைக்கு வெள்ளைப் புடவையைச் சாத்துகிறார்கள். இதே காரணம்தான் சரஸ்வதி தேவி வெள்ளைக் கலையுடுத்துவதற்கும். ' வெள்ளைக்கில்லை கள்ளச் சிந்தை'."
கேள்வி: " சாந்திராயண விரதம் யாது?"
பதில்: " பூர்ணிமை தொடங்கி அமாவாசை வரை ஒவ்வொரு பிடி அன்னங் குறைத்தும். அமாவாசை தொடங்கி பூர்ணிமை வரை ஒவ்வொரு பிடி அன்னம் அதிகப்படுத்தியும் புசித்து அநுஷ்டிக்கப்படும் பிராயசித்த விரதம். சாந்திராயணம்! திருவிளையாடற் புராணம் தலவிசேடப் படலத்தில் கூறப்பட்டுள்ளது.
--' குமுதம் வினா - விடை ' நூலில் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்.
-- இதழ் உதவி: K. கண்ணன், செல்லூர்.

No comments:
Post a Comment