ஒரு வீடு அழகாக, பளிச்சென்று இருந்தாலே அமைதியும், மகிழ்ச்சியும் அந்த குடும்பத்தைத் தேடி வரும். உங்கள் வீடு அழகாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க சில டிப்ஸ்கள்:
* பூசணிக்காய் சாற்றில் தங்கநகைகளை ஊறவைத்துக் கழுவினால் அவை நன்றாக பளிச்சிடும்.
* பாத்ரூம் டைல்ஸ்களில் படிந்திருக்கும் துருப்பிடித்த கறைகளை நீக்க கெரசினை உபயோகிக்கலாம்.
* எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறு பூச்சிகள் அண்டாது.
* குளிர்சாதனப்பெட்டியை துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரில் துடைத்தால் பூச்சிகள், சிறுவண்டுகள் நுழையாது.
* பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது, மங்காது.
* உலோக ஃபர்னிச்சர்களில் இருக்கும் துருபிடித்த கறையைப் போக்க டர்பண்டைன் பயன்படுத்தித் துடைக்க வேண்டும்.
* குளியலறைக் கதவுகளில் திட்டுத் திட்டாக படிந்திருக்கும் சோப்பு கறைகளை நீக்க வெள்ளை வினிகரை ஸ்பாஞ்சில் தொட்டுத் துடைக்க
வேண்டும்..
* நிறம் மங்கிப்போன லெதர் பர்ஸ், பெல்ட் மற்றும் ஹேண்ட் பேக்குகளை கிளிசரினில் ஸ்பாஞ் தோய்த்துத் துடைத்தால் நன்கு பளபளப்பாக மாறும்.
-- சத்யா சுரேஷ், குமுதம் . 24 - 10 - 2012.

No comments:
Post a Comment