குருகுலவாசம் முடிந்து சீடர்கள் கிளம்பும்போது ' தர்மத்தைக் காத்து நீதி வழி நடந்திடுங்கள் ' என குரு ஆசியளித்தார். ' தர்மம் வேறு; நீதி வேறா?' என சந்தேகம் கொண்ட சீடர்கள், குருவிடமே விளக்கம் கேட்டனர்.
புன்னகைத்த குரு, ' நீதி என்பது இடத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறும். உதாரணமாக முன் விரோதத்தால் சண்டையிட்டு ஒருவனைக் கொல்வது கொலை. ஆனால், எதிரி நாட்டின் வீரர்களோடு சண்டையிட்டுக் கொல்வது கொலையல்ல; வீரம்! இப்படி நீதி மாறக்கூடியது. எனவே அதைக் காத்திட முடியாது. ஆனால் தர்மம் மாறாதது. அதனைக் காப்பாற்றுவது அவசியம் !' என தெளிவுபடுத்தினார்.
உணர்ந்த சீடர்கள் குருவை வணங்கி விடைபெற்றனர்.
-- ஜி.கே.சுந்தரமூர்த்தி, கோபிசெட்டிபாளையம்.
-- குமுதம் பக்தி ஸ்பெஷல். அக்டோபர் 16 - 31. 2012.

No comments:
Post a Comment