Saturday, March 28, 2015

சந்தியாவந்தனம் - தர்மம்..

சந்தியாவந்தனம்.செய்ய  வேண்டிய  நேரங்கள்:
' காணாமல்,  கோணாமல்,  கண்டு  கொடு!'  --என்பது  வாக்கியம்.
அதாவது,  சூரியன்  கண்ணுக்குத்  தெரியாதபோது,  சூரிய  உதயத்துக்கு  முன்  அர்க்யம்  கொடு;  இது  காணாமல்  கொடு  என்பதை  குறிக்கும்.  கோணாமல்  என்பது,  சூரியன் தலைக்கு  நேராக  உள்ள  உச்சி  காலத்தில்,  அர்க்யம் கொடு  என்பது.
அடுத்து,  கண்டு  கொடு  என்பது,  சூரியன்  மறைவதற்கு  முன்,  மாலை  வேளையில்  அர்க்யம்  கொடுக்க  வேண்டும்.  இதை  சிரத்தையுடன்  செய்து  வந்தால்,  ஆரோக்கியம்,  புண்ணியம்  எல்லாம்  கிடைக்கும்.
' காணாமல்,  கோணாமல்,  கண்டு  கொடு....'  என்பதற்கு,  வேறு  ஒரு  விளக்கமும்  உள்ளது.  தர்மம்  செய்யும்  போது,  அதை  விளம்பரப்படுத்தாமல்,  யாருக்கும்  தெரியாமல்  கொடு;  இது  காணாமல்  கொடு  என்பது.
கோணாமல்  கொடு  என்பது,  தர்மம்  செய்யும்  போது,  மனம்  கோணாமல்,  முழு  மனதோடு  கொடு  என்பது.  கண்டு  கொடு  என்பது,  யாருக்கு  என்ன  தேவை  என்று  பார்த்து,  ஸ்த்  பாத்திரத்துக்கு  கொடு  என்பது.  படிப்பில்  ஆர்வம்  இல்லாதவனுக்கு  புத்தகமும்,  கல்யாண  ஆசை  இல்லாதவனுக்கு  பெண்ணும்,  பசி  இல்லாதவனுக்கு  அறுசுவை  உணவும்  கொடுப்பது  பயனற்றது.
இப்படியாக  காணாமல்,  கோணாமல்,  கண்டு  கொடு  என்பதர்கு,  சந்தியாவந்தனம்  செய்வதிலும்,  தர்மம்  செய்வதிலும்  சில  நியதிகல்  உண்டு.  இவைகளைத்  தெரிந்து  செய்வது  நல்லது !
-- வைரம்  ராஜகோபால் . ( ஞானானந்தம்  பகுதியில் )
-- தினமலர் வாரமலர் .  சென்னைப்  பதிப்பு.  மே  8, 2011.  

No comments: