உலக அளவில் சனி பகவானுக்கு 2 இடங்களில்தான் கோயில் உள்ளது . அகமதாபாத்தில் உள்ள ஹேமந்த் நகருக்கு அடுத்தாற்போல் திருநள்ளாறு பகுதிதான் கோயிலாக விளங்குகிறது
--- புதுச்சேரி கவர்னர் கோவிந்த் சிங் குர்ஜார் .
வடமொழி , வேதம் , சைவம் .
வடமொழியில் ரிக் , யஜுர் , சாமம் , அதர்வணம் என்று நான்கு வேதங்கள் இருப்பது போல் , தமிழில் அறம் , பொருள் , இன்பம் , வீடு என்ற 4 உறுதிப் பொருள்கள் உள்ளன . இவையே ' நான் மறை ' என்று அழைக்கப்படுகிறது . வடமொழி வேதங்களின் உட்கருத்தும் இந்த 4 உருதிப் பொருட்களே .
வேதங்கள் சைவசமயத்தின் பொதுவான கொள்கைகளை விளக்குகிறது . சைவ சமயத்திற்கே உரிய கொள்கைகளை சைவ ஆகமங்கள் கூறுகின்றன . இந்த ஆகமங்கள் மொத்தம் 28 ஆகும் . அவற்றை சிவபெருமான் தனது ஐந்து முகங்களால் படைத்தார் .
திருவடி தீட்சை என்பது சைவ சமயத்தில் சிறப்பாக போற்றப்படுகிறது . சைவ சமய குரவர்கள் நால்வரில் திருஞான சம்பந்தருக்கு சீர்காழியிலும் , திருநாவுக்கரசருக்கு நல்லூரிலும் , சுந்தரருக்கு பண்ருட்டிக்கு அருகில் உள்ள சித்தவட மடத்திலும் , மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையிலும் சிவபெருமான் திருவடி தீட்சை வழங்கினார் .
சைவ சமய சாஸ்திரங்களை கூறும் நூட்கள் ' மெய்கண்ட சாஸ்திரங்கள் ' என்று அழைக்கப்படுகின்றன . அவை : திருவந்தியார் , திருக்களிற்றுபடியார் , சிவஞான் போதம் , சிவஞான சித்தியார் , இருபா இருபது , உண்மை விளக்கம் , சிவப்பிரகாசம் , திருவருட்பயன் , வினா வெண்பா , போற்றிப் பஃறொடை , கொடிக்கவி , நெஞ்சுவிடு தூது , சங்கற்ப நிராகணம் என்ற 14 நூட்களாகும் .
4 comments:
சனி பகவானுக்கு பூணேயிலிருந்து ஷீரடி போகும் சாலையில் சனிசிங்பூர் (என் நினைவு) எனும் ஊரில் ஒரு கோயில் இருப்பதாகவும் கறுப்பு ஆடை அணிந்துதான் அந்தக் கோயிலுக்குள் செல்லவேண்டும் என்று நான் கேள்விப்பட்டேன். இதை நான் ஷீரடி செல்லும்போது அன்பர் ஒருவர் சொன்னார். அக் கோயில் நெடுஞ்சாலையிலிருந்து உள்ளே இருந்ததால் என்னால் செல்லமுடியவில்லை.
சு. கிருஷ்ணமூர்த்தி
திரு.S .கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ,
தங்களது சந்தேகம் நியாயமானதுதான் . அதற்கான பதிலை 19 -03 -2009 ல் எனது திரட்டியில் , தயவு கூர்ந்து படித்து தெரிந்து கொள்ளவும் .
திரு.S .கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ,
தங்களது சந்தேகம் நியாயமானதுதான் . அதற்கான பதிலை 19 -03 -2009 ல் எனது திரட்டியில் , தயவு கூர்ந்து படித்து தெரிந்து கொள்ளவும் .
திரு.S .கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ,
தங்களது சந்தேகம் நியாயமானதுதான் . அதற்கான பதிலை 19 -03 -2009 ல் எனது திரட்டியில் , தயவு கூர்ந்து படித்து தெரிந்து கொள்ளவும் .
Post a Comment