புயலின் வகைகள்
புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் 19 ஆம் நூற்றாண்டில் நினைத்தார். இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார்.
இந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று ( Gale ), மரக்கிளைகள் ஒடியலாம். 10 என்றால் புயல் காற்று (Strom ). 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மனிக்கு 74 கி.மீ., வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவை.
அதேநேரம் புயல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளில் Humicane ( சூறாவளி ), அமெரிக்காவில் Tomado ( சுழன்றடிக்கும் சூறாவளி ), சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typoon ( சூறாவளிப் புயல் ), மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் Willy Willy என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone ( புயக் ) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன.
-- ஆதி வள்ளியப்பன். வெற்றிக்கொடி.
-- ' தி இந்து ' நாளிதழ்.திங்கள், டிசம்பர் 9, 2013.

No comments:
Post a Comment