* பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ஸ்நாக்ஸ் டப்பாவில் ஆப்பிள் போட்டு கொடுதனுப்புகிறீர்களா? பழத்தை துண்டுகளாக நறுக்கியதும் சர்க்கரை நீரில் முக்கி, தண்ணீரை உதறிவிட்டு டப்பாவில் வைத்தால் சுவை கூடுதலாக இருப்பதோடு, பழங்கள் கறுத்துப் போகாமலும் இருக்கும்.
* முறுக்கு வகைகளைச் செய்ய ஆரம்பிக்கும்போது, அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் காயவிடுங்கள். மாவு பிசைவதற்கும் எண்ணெய் காய்வதற்கும் சரியாக இருக்கும். காய்ந்த எண்ணெயில் இருந்து ஒரு கரண்டி எடுத்து மாவில் ஊற்றி பிசைந்தால், முறுக்கு கரகரப்பாக இருப்பதோடு, கருகாமலும் இருக்கும்.
* பச்சை மிளகாய்களை ஈரமில்லாமல் துடைத்து, ஒரு டப்பாவில் போட்டு, மேலே மஞ்சள் தூளை தூவி காற்று புகாமல் மூடி வையுங்கள். ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே பல நாட்கள் வரை பச்சை மிளகாய் ஃபிரெஷ்ஷாகவே இருக்கும்.
--- வாசகிகள் பக்கம். அவள் விகடன். 25 - 9 - 2012.
-- இதழ் உதவி : P.K.ஸ்ரீபாலா, பச்சூர் , காரைக்கால்.

No comments:
Post a Comment